புதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய மொபைல் அனுபவத்துடன் Vivo V15Pro அறிமுகம்

Vivo இலங்கையில் தனது புத்தம் புதிய V15Pro ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது. NEX மாதிரிக்கு பின்னர் துறையின் முதலாவது மேம்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய முன்புற Elevate Md கமராவை கொண்ட தொலைபேசியாக V15Pro அமைந்துள்ளது. முழுத்திரையை கொண்ட ஸ்மார்ட்ஃபோனாக அமைந்துள்ளதுடன், மதிநுட்பமான பிரத்தியேக உதவி அம்சங்களை கொண்டதுடன், பாவனையாளரை புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்ததாக அமைந்துள்ளது.

NEX இல் காணப்படும் அதே முன்புற Elevate ஆன கமரா காணப்படுவதுடன், அதை விட சிறந்ததாக அமைந்துள்ளது. V15Pro இல் 32MP முன்புற கமரா காணப்படுவதுடன், சிறந்த selfiefis எடுப்பதற்கு உகந்தது. வடிவமைப்பு மேம்படுத்தல்கள் காரணமாக, கமரா சகல நிலைகளையும் தாங்கிக் கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது.

அதன் Super AMOLED Ultra FullView திரை உடன் 91.64% screen-to-body ratioI கொண்டுள்ளது. இது கேமிங் மற்றும் வீடியோ பார்வையிடலுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

AI Triple கமராவுடன்,தெளிவான புகைப்படங்களை எடுக்க முடிவதுடன், பரந்தளவு 48 Million Quad Pixel Sensor, 8MP AI Super Wide-Angle Camera மற்றும் 5MP Depth கமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. பின்புற கமரா கொண்டுள்ள “four-in-one pixel” தொழில்நுட்பம் ஊடாக நான்கு pixelfis இணைத்து ஒரு large pixel ஆக இரவு நேரத்திலும் தெளிவான 12mp புகைப்படங்களை எடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது. AI Super Wide-Angle ​ெகமரா 120 பாகை வரை நீடித்துக் கொள்ளக்கூடியது.

V15Pro இல் AIFace Beauty, AI Portrait Framing மற்றும் AI Super Night Mode உள்ளம்சங்கள் அடங்கான AI புகைப்பட உள்ளம்சங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றினூடாக, வெவ்வேறு ஒளிமட்டங்களில் தெளிவான படங்களை எடுத்துக் கொள்ள முடியும்.

புகழ்பெற்ற In-Display Fingerprint Scanning தொழில்நுட்பத்தை V15Pro தன்வசம் கொண்டுள்ளது. தற்போது 5ஆம் தலைமுறையாக இது அமைந்துள்ளது. உயர் fingerprint pixel density உடனும் algorithm உடனும் பாவனையாளர்கள் தமது கையடக்க தொலைபேசியை பாதுகாப்பான வகையில் unlock செய்யலாம்.

 

Comments