ரீலோட் மற்றும் கொடுப்பனவு முறை அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

ரீலோட் மற்றும் கொடுப்பனவு முறை அறிமுகம்

PayMaster இடமிருந்து புத்தாக்கமான முறையில் மொபைல்

புதிய PayMaster app ஐ கொழும்பில் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் PayMaster Solutions (Pvt) Ltd. – Sri Lanka அறிமுகம் செய்திருந்தது. இலங்கையர்கள் தமது கையடக்க தொலைபேசிக்கு ரீலோட் செய்வது மற்றும் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த app அமைந்துள்ளது.

பணமில்லாத கொடுக்கல் வாங்கல் முறையை நோக்கி நாடு பயணித்த வண்ணமுள்ள நிலையில், PayMaster app என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக அமைந்துள்ளது. தற்போதைய நிதி கட்டமைப்பில் காணப்படும் சுமையை குறைப்பதுடன், அதிகளவு வரையறைகளற்ற மற்றும் வினைத்திறன் வாய்ந்ததாக PayMaster அமைந்திருக்கும். ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த app வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையர்களின் தினசரி கொடுப்பனவு நடவடிக்கைகளுக்கு வலுவூட்டுவதாக அமைந்திருப்பதோடு, நேரத்தையும், பணத்தையும் சேமிக்கக்கூடிய வழிமுறையை வழங்குவதாக அமையும்.

இந்த அறிமுகம் தொடர்பாக PayMaster இன் பணிப்பாளரும் இணை ஸ்தாபகருமான ரன்சிக டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது அணியினரின் கடுமையான உழைப்்பைத் தொடர்ந்து, இலங்கையில் திட்டமிட்டபடி இந்த app ஐ நாம் அறிமுகம் செய்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். வாடிக்கையாளரை அடிப்படையாகக் கொண்ட இந்த வடிவமைப்பினூடாக பாவனையாளர்களுக்கு பெருமளவு தெரிவுகள், பாவனைக்கு இலகு மற்றும் முழுப் பாதுகாப்பு போன்றன வழங்கப்படுகின்றன. app இன் உயர் மட்ட வெளிப்படைத்தன்மையின் காரணமாக பாவனையாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டு, எவ்விதமான மறைமுகக் கட்டணங்கள் அறவிடப்படுவது தவிர்க்கப்படுகிறது. PayMaster பாவனைக்கு எளிமையான கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், அனைவராலும் அணுகக்கூடியதாக அமைந்துள்ளது” என்றார்.

app இனுள் காணப்படும் Gamification, பாவனையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், Incentivization ஊடாக பாவனையாளர்களுக்கு app இல் சாதாரண கொடுக்கல் வாங்கல் காலப்பகுதியை விட குறிப்பிடத்தக்களவு நேரத்தை செலவிட ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும்.

Comments