Kadella நிர்மாண கண்காட்சி 2019; பிரதான அனுசரணையாளராக | தினகரன் வாரமஞ்சரி

Kadella நிர்மாண கண்காட்சி 2019; பிரதான அனுசரணையாளராக

பெருமளவானோரின் கவனத்தை ஈர்த்த வீடமைப்பு கண்காட்சி நிகழ்வான Kadella நிர்மாண கண்காட்சி 2019 இன் பிரதான அனுசரணை மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக செலான் வங்கி தொடர்ச்சியான ஆறாவது வருடமாகவும் கைகோர்த்திருந்தது.

ஏசியா எக்ஸிபிஷன்ஸ் அன்ட் கொன்வென்ஷன்ஸ் (பிரைவட்) லிமிடெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெதெல்ல கொன்ஸ்டரக்ட் கண்காட்சி 2019 நிகழ்வில் சுமார் 35000 க்கும் அதிகமான பங்குபற்றுநர்கள் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து பங்கேற்றார்கள். வீடமைப்புக் கடன்கள் தொடர்பான விசேட அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டு செலான் வீட்டுக் கடன் நிபுணர்களினால், பங்குபற்றுநர்களுக்கு செலான் வங்கிவீடமைப்புக் கடன் ஒன்றைபெற்றுக் கொள்வது பற்றிய எளிமையான படிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், தமது இல்லக் கனவை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுபற்றிய அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

Comments