ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா | தினகரன் வாரமஞ்சரி

ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, ஐரா படத்தின் அதிகாலை மூலம் தனது ரசிகர்களை காண வருகிறார்.

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஐரா’. இந்த படம் எதிர்வரும் 28ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இதற்கு சென்னையில் காலை 5மணி காட்சி போடப்படும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஜே.ஜே.ஆர் புரொடக்‌‌ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், சர்ஜுன். இவரது இரண்டாவது படம்தான் ‘ஐரா’. நயன்தாரா, இதில் பவானி மற்றும் யமுனா என்னும் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29ஆம் திகதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் வெளியாகிறது. அதற்கு முந்தைய நாளான வியாழக்கிழமை, ‘ஐரா’ படம் வெளியாகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி கே.எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

Comments