ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினக்கூட்டத்தில் அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினக்கூட்டத்தில் அறிமுகம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் மே தினத்தன்று நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்படுவார் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடி ஆராயுமென்று தெரிவித்த அமைச்சர் கிரியெல்ல,  அந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளப்படுமென்று கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சுமார் பத்து இலட்சம் பேரை பங்குபற்றச் செய்ய நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. அந்தக் கூட்டத்திலேயே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பகிரங்கப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இன்னமும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ஓர் இணக்கத்தை எட்டவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இரு கட்சிகளும் இணக்கத்தை ஏற்படுத்திக்ெகாள்ளாத நிலையில், அடுத்த சந்திப்பு எதிர்வரும் மே மாதம் ஒன்பதாந்திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (வி)

எம்.ஏ.எம்.நிலாம்

Comments