முஸ்லிம் பாடசாலைகள் 17ஆம் திகதி ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் பாடசாலைகள் 17ஆம் திகதி ஆரம்பம்

ஏப்ரல் -11ஆம் திகதி வியாழக்கிழமை முதலாந்தவணை விடுமுறைக்காக மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள், இரண்டாந்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 17ஆம்திகதி புதன்கிழமை மீளத் திறக்கப்படவுள்ளன. 

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாந் தவணை – (முதலாம் கட்டம்) 2019ஏப்ரல் 17ஆம் திகதி புதன்கிழமை முதல் மே 03ம் திகதி வெள்ளிக்கிழமை வரையாகும்.

(இரு தினங்களும் உட்பட. பின்னர், றமழான் மாத நோன்புக்காக 2019.05.04 முதல் 2019.06.09 வரை விடுமுறை வழங்கப்படும்.   இரண்டாந் தவணை – (இரண்டாம் கட்டம்) 2019 ஜூன் 10 திங்கட்கிழமை முதல் 2019 ஆகஸ்ட் 09ம் திகதி வெள்ளிக்கிழமை வரையாகும். (இரு தினங்களும் உட்பட) இதேபோன்று, முதலாந்தவணை விடுமுறைக்காக ஏப்ரல் 05ம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகளும் இரண்டாந்தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன.

அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

Comments