பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் இலங்கை விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் இலங்கை விஜயம்

பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹமூத் குவெர்ஷி உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மே 03 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.  கொழும்பில் தங்கியிருக்கும் அவர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் அவர் சந்தித்து உரையாடவுள்ளார்.  இலங்கை பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்தும் நோக்கில் அவர் இந்த உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments