விஹாரி -புதுவருடப்பிறப்பு | தினகரன் வாரமஞ்சரி

விஹாரி -புதுவருடப்பிறப்பு

வாக்கிய பஞ்சாங்கப்படி “விஹாரி” புதுவருடப்பிறப்பு 2019.04.14ஆந் திகதி ஞாயிறு பி.ப. 01மணி12நிமிடம் என்றும் விஷுபுண்ணிய காலம் அன்று காலை 09.12முதல் மாலை 05.12வரையாகும் எனவும் மருந்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யும் போது, தலைக்கு ஆலிலையும், காலுக்கு இலவமிலையும் வைக்கப்பட வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது. 

வருடப் பிறப்பு கிரக நிலை 

பலன் இவ்வருடம் முன்மழை சமம். பின்மழை குறைவு. பின்பு அதிக குளிர். ஸ்திரீகள் மூலம் கஷ்டம். கல்வியில் தடங்கல் ஏற்பட்டு பின் முன்னேற்றம். அந்நியசெலவாணி அதிகரித்தல். பொருட்களின் விலை ஏற்றம் சனங்களுக்கு கிடையே ஒற்றுமைக் குறைவு. புடவைத் தொழில் வர்த்தகம் விருத்தி. கமம்விருத்தி. வருட நடுப்பகுதியில் வெப்பம் அதிகரித்தல். அரசியலில் சிறு குழப்பம் என்பன உண்டாம் என்று வாக்கியத்தில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதேவேளை திருக்கணித பஞ்சாங்கம் ஒகில மாற்றங்களுடன் வருடப் பிறப்பு, சங்கிரமண புண்ணிய காலம் என்பனவும், புதுவருட ஜாதகபலனும் வேறுபட்டும் ஒருசில ஒரு மித்தும் காணப்படுகின்றதை விரிவாக இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. 

இதோ திருக்கணித பஞ்சாங்கப்படி விஹாரி புதுவருட விபரங்கள் ஜோதிட மணி: சி. ஜெகதீஸ்வர சர்மா அவர்களால், யாழ்ப்பாண மத்திய நாடிக்குக் கணிக்கப்பெற்ற 132ஆம் வருடப் பிரசுரமான திருக்கணித பஞ்சாங்கப்படி “விஹாரி” புதுவருடப் பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டு 205ல் -2019.04.14ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமை பி. ப 02மணி 09நிமிடத்தில் பிறக்கின்றது. 

சித்திரைப் புதுவருடம் பிறக்கும்போது உதய லக்கினம் கடகமாகி, லக்கினாதிபதி சந்திரன் பலமடைந்திருப்பதால், சுபப் பலன்கள் கிடைக்கிறது. அரசக் கிரகம் “சூரியன்” உச்சமடைந்து, குருவின் நற்பார்வை பெறுவதால் நன்மையான பலன்கள் அதிகமாக நிகழும். 2ஆம் வீட்டதிபதி “சூரியன்” 9ஆம் பாவத்தைப் பெறுவதால், அந்நிய நாட்டுத்தொடர்புகளால் வருமானம் உயர்வடையும். போக்கு வரத்துக்களில் வசதியீனங்கள் தென்படும். “புதன்” நீசமடைந்து 8ஆம் பாவத்தைப் பொருந்துவதால், கல்வித்துறையில் சற்று மந்தநிலையேற்படும். 

“குருபகவான்” பலமடைந்து 5ஆம் பாவத்தைச் சேர்வதால், சமயத்துறையில் முன்னேற்றம் காணப்படுவதோடு, சமயத்தலைவர்கள், விவாக தாமதங்களும், விவாகரத்துக்களும் ஏற்படக்கூடும். செவ்வாய் நற்சஞ்சாரம் செய்வதால் விவசாய வளர்ச்சி நன்றாக அமையும். இலங்கையை ஆளும் “கும்பராசிக்கு” அதிபதி “சனி” 11ஆம் வீட்டில் இருப்பதாலும், “குருபகவான்” பலமடைந்து. 11ம் வீட்டுக்கு படிப்படியாக வருவதாலும், நாட்டில் நல்ல முன்னேற்றமுண்டாகும். பொருளாதாரமும் ஸ்திர நிலையை அடையும். மேற்குறிப்பிட்டபடி சித்திரை புதுவருட ‘விஹாரி’ பலன்களை கிரகநிலைப்படி குறிக்கப்பட்டிருப்பதை வாசக அன்பர்கள் அறிய முடியும். மேலும், புது வருடக் கருமங்களைப் பார்ப்போம். “மேடசந்கிரமண புண்ணிய காலம்” 14.04.2019ஞாயிறு பகல் “10-.09முதல், மாலை 06.09வரை இது மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யும் காலம். தலை காலுக்கு வைக்கும் மூலிகை இலைகளாக இலவமிலை சிரசுக்கு, விளாவிலை காலுக்குமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பின்வரும் நட்சத்திரங்கள், தோஷ நட்சத்திரங்களாக பதிவேற்றமாகியுள்ளது. புனர்பூசம், பூசம், ஆயிலியம், கேட்டை மூலம், பூராடம், உத்தராடம் 1ஆம் பாதம், ரேவதி. இந்நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்துவக் குணம் நிறைந்த மருத்து நீர் வைத்து ஸ்நானம் செய்து, ஸ்ர குல தெய்வ வழிபாட்டுடன் இயலாதவர்கட்டு உகந்த தானங்கள் வழங்கி சங்கிரணட தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்வது சுபம் தரும் நலமாகும். இவ்வருடம் விஹாரியில் மழை மரக்கால் ஒன்று. இதனால் நாட்டின் சில சில இடங்களில் மழையின்மையும் ஏற்படலாகும். 

சிவப்பு நிற ஆடை, அல்லது சிவப்புக்கரை அமைந்த வெள்ளை ஆடை அணிவது சுபம். இதனையே வாக்கியமும் கூறுகிறது.

கைவிசேடம் :14.04.2019ஞாயிறு இரவு 08.20 - 9.30 

15.04.2019திங்கள் காலை 05.00 – 6.00 

விருந்து :        பூமிப்பிரவேசம் குரு  ராஜ பிரபு, நண்பர்கள்,

உறவினர் தரிசனம் : 14.04.2019ஞாயிறு இரவு 08.20 – 9.30

17.04.2019புதன் பகல் 10.00 – 11.15 

வித்தியாசாலை, கற்றல் கலை : 17.04.2019புதன் பகல் 10.00 -15.15 

வித்தை, பயிலல் :  22.04.2019திங்கள் பகல் 11.47- 12.30 

ஏர்மங்கலம், வயல் தோட்டச் :17.04.2019புதன் பகல் 10.30- 11.45 

செயற்கை, வியாபாரம்: 01.05 2019. புதன் பகல் 11.03- 12.05 

புதுக்கணக்கு எழுத்து: பிரயாணம் 17.04.2019புதன் பகல் 10.30 - 11.45 

விஹாரி புதுவருட             ஆதாயம்    விரயம் 

மேடம், விருச்சிக இராசியினர்க்கு:   14- -                                14           சமம் 

இடபம், துலாம் இராசியினர்க்கு:     08-                                  08           சமம் 

மிதுனம், கன்னி இராசியினர்க்கு:     11-                  05           லாபம் 

கர்க்கடக இராசியினர்க்கு  :         11-                  11           சமம் 

சிங்க இராசியினர்க்கு:              08                   14           நஷ்டம் 

தனுசு, மீன இராசியினர்க்கு:         02                   08           நஷ்டம் 

மகரம், கும்பராசியினர்க்கு:    05-                  02           லாபம் 

 

கலாபூஷணம் 

சிவஸ்ரீ அ. அரசரெத்தினம்...

 சேனையூர் ஸ்ரீ நாகம்பாள் ஆலய 
பிரதம குருக்கள்

Comments