சின்கிளயர் லூவிஸ் | தினகரன் வாரமஞ்சரி

சின்கிளயர் லூவிஸ்

உழைப்பால் உயர்வு கண்டு உலகப்புகழ் பெற்ற இலக்கிய மேதையும் சினிமா நடிகருமான சின்கிளயர் லூவிஸ் ஆறு மாதங்கள் ஒரே மூச்சில் இரவுபகலாக எழுதிய ஒரு கட்டுரைக்கு 10சிலிங் பெற்றவர், பிற்காலத்தில் இலக்கியத்துக்காக நோபல் பரிசை பெற்றார் என்பதனை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இதை அடைவதற்காக மிகவும் கஸ்டப்பட்டு உழைத்தார்.  

இதே இலக்கிய கர்த்தாவை நான்கு பத்திரிகையாளர்கள் விரட்டியடித்தனர். 1920ஆம் ஆண்டு 'மெயின் ஸ்ட்ரீட்' என்ற இவருடைய நாவல் வெளியாகியது. அது அவருடைய ஏழாவது நூலாகும். இவர் முதலில் எழுதிய ஆறு நூல்களையும் எவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் 'மெயின் ஸ்ட்ரீட்' மட்டும் உலகத்தையே மாற்றிவிட்டது. ஆங்கில இலக்கியம் படைத்தவர்கள் எல்லாம் இதனைப் படித்து விழித்தெழுந்தனர். பெண்கள் இது ஓர் இலக்கியப் படைப்பு என்று புகழாரம் சூட்டினர். சொற்பொழிவாளர்கள் இந்த நூலை கண்டித்துப் பேசினர். ஏறக்குறைய இது அமெரிக்காவில் இலக்கியப் போரையே உண்டாக்கியது.  

லூவிஸ் அவரது படைப்பை ஆண்டு கணக்கில் எழுதுவது வழக்கம். உடனுக்குடன் எழுதி பிரசுரிப்பது அவருக்கு பிடிக்காது. குறைந்தது ஒரு புத்தகம் எழுதுவதற்கு ஆறுமாதங்களை எடுத்துக்கொள்வார். ஒருமுறை ஒரு புத்தகத்தின் முன்னுரைக்காக 60,000வார்த்தைகள் எழுதினார். அதுவே ஒரு புத்தகமாக வெளிவந்து விட்டது. அதன் பெயர் 'அரோஸ்மித்'. அது முதலாளி தொழிலாளி உரிமைப் போராட்டம். பிறகு அதன் கையெழுத்துப் பிரதியை கிழித்தெறிந்தார்.  

மெயின் ஸ்ட்ரீட் கதையை எழுதத் தொடங்கிய மூன்று தடவைகளும் அவரால் முடியவில்லை. எனினும் 17ஆண்டுகளின் பின்னரே இதனை எழுதிமுடித்தார். இது வெளியிடப்பட்ட பின்னர் உலக எழுத்தாளர்களையே அப்படியே ஈர்த்தது. அதன் பிறகு பாயிட் அரோஸ்மித் டாயிஸ்வோர்ட் இட் காண்ட கெப்பனகியர் என பல புத்தகங்களை எழுதினார்.   

சின்கிளயர் லூவிஸ் தனது ஆரம்பகால கஸ்டங்களைப்பற்றி அவர் எதுவும் கூறவில்லை. புதிய வக்கீல், புதிய வைத்தியர் இதுபோன்ற கஸ்டங்களை அனுபவித்துத்தான் முன்னேற வேண்டும் எனக்கூறிய லூவிஸ் தனது வாழ்நாளில் எவரையும் குறை கூறியதில்லை. உலகில் மிக உயர்ந்த நோபல் பரிசு கிடைத்ததை அவரால் நம்பமுடியவில்லை. உண்மையில் எனக்கு நோபல் பரிசா என ஆச்சரியமடைந்தார். தனது வெளியீட்டின் மூலம் எவ்வளவு தொகை கிடைத்தது என்று அவருக்கே தெரியாமல் இந்த பணியை வக்கீலிடம் ஒப்படைத்ததாகக் கூறியிருந்தார்.  

மு. தருமன், 

வட்டகொடை.  

Comments