இசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர | தினகரன் வாரமஞ்சரி

இசைத் துறையில் சாதிக்கும் SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த ஷேன் மனோஹர

SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான ஷேன் மனோஹர ராஜபக்ஷ, தமது முதலாவது இசை வெளியீடான “வண்ணம“ பாடலை அண்மையில் பிலியந்தலையில் SOS சிறுவர் கிராமத்தில் வெளியிட்டிருந்தார். இதனூடாக இசைப் பயணத்தில் தமது முதலாவது படியை இவர் முன்வைத்துள்ளார். 

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணம் தொடர்பாக ஷேன் விவரிக்கையில், “நான் மைக்கல் ஜாக்சனின் பாடல்களை அதிகளவு ரசிப்பவன் என்பதுடன், அவரைப் போன்ற ஒரு கலைஞராக திகழ வேண்டும் எனும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளேன். இந்த கனவில் ஒரு படி நிறைவேறியுள்ளதை காண்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பாடல் தொடர்பாக அனைவரும் வெளியிட்டிருந்த நேர்த்தியான கருத்துக்கள் பற்றி நான் மகிழ்ச்சியடைவதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த பலருடன் இந்த பாடலை பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறேன்” என்றார். 

10வயதில் SOS CVSL உடன் இணைந்து கொண்ட ஷேன், ரசிகர்கள் முன்னர் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என கனவை கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே மூன்று இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்துள்ளார். எதிர்காலத்தில் மேலு ம் பலதை ஏற்பாடு செய்வார். தற்போது, ஷேன் கொழும்பிலுள்ள Colombo International Academy of Training & Standard Institute இல் பணியாற்றி வருகிறார். 

ஷேனின் சாதனை தொடர்பில் SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை கருத்துத் தெரிவிக்கையில், ”ஷேனின் சாதனைகள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதுடன், அவரின் கனவை நிறைவேற்ற அவர் ஆரம்ப படிகளை மேற்கொண்டுள்ளார். அதீத ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இவர் சிறந்த உதாரணமாகும்.” என்றார். 

பிலியந்தலையில் 16 குடும்ப இல்லங்களுடன் இலங்கையில் முதலாவது SOS சிறுவர் கிராமம் நிறுவப்பட்டது. இந்த கிராமத்தில் மூன்று தலைமுறை சிறுவர்கள் காணப்படுவதுடன், தற்போது பிலியந்தலை SOS கிராமத்தில் காணப்படும் குடும்பங்கள் நான்காம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

Comments