செலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு | தினகரன் வாரமஞ்சரி

செலான் வங்கியின் கிளை வலையமைப்பு பாதுக்க நகருக்கு விஸ்தரிப்பு

செலான் வங்கி தனது புதிய கிளையை பாதுக்க நகரில் அண்மையில் திறந்துள்ளது. இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

இந்த கிளை நிறுவப்பட்டுள்ளதனூடாக, வங்கி தனது கிளை வலையமைப்பை மொத்தம் 172ஆக உயர்த்தியுள்ளதுடன், இலங்கையர்களுக்கு தனது வங்கியியல் சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.  

பாதுக்க கிளை, இல. 36/A, கொழும்பு வீதி, பாதுக்க எனும் முகவரியில் அமைந்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை மு.ப. 9மணி முதல் பி.ப. 3மணி வரை திறந்திருக்கும். இந்த கிளையினூடாக, நெகிழ்வு தன்மைமிக்க மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை பிரதேசத்தைச் சேர்ந்த தனிநபர்கள், வளர்ந்து வரும் தொழில் முயற்சியாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பெற்றுக் கொள்ளலாம். தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான ஆலோசனைகளையும் இலகுவான முறையில் பெறலாம்.  

நவீன டிஜிட்டல் வசதிகளை கொண்டுள்ளதுடன், பிரத்தியேக வங்கியியல் சேவைகளான நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள், சிறுவர் சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்புகள், வீடமைப்பு கடன்கள், NRFC/RFC கணக்குகள், லீசிங் வசதிகள், கடன் மற்றும் பற்று அட்டைகள் மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள் போன்றவற்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.  

தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் செலான் வங்கி தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், இதற்காக புதிய தொழில்நுட்பம், புத்தாக்கமான தீர்வுகள் மற்றும் சேவைகள் போன்றவற்றை அறிமுகம் செய்து, வங்கியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்திய வண்ணமுள்ளது. வங்கி தனது பிரசன்னத்தை 172 கிளைகளாக அதிகரித்துள்ளதுடன், நாட்டின் முக்கிய பகுதிகளில் 200 க்கும் அதிகமான ATM இயந்திர வலையமைப்பையும் கொண்டுள்ளது. 

Comments