டொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள் | தினகரன் வாரமஞ்சரி

டொமாஹோக் அறிமுகம் செய்யும் புதியரக மிதிவண்டிகள்

மிதிவண்டி (சைக்கிள்) உலகில் இருபதாண்டு கால வரலாற்றினைக் கொண்டுள்ள டொமாஹோக் சைக்கிள் நிறுவனம், சித்திரைப் புதுவருட கொண்டாட்டத்தை மேலும் குதூகலப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான தோற்றங்களில் பல்வேறுவகை சைக்கிள்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளெக்எக்ஸ், மெக்எக்ஸ், லெனொக்ஸ் சைக்கிள்கள் மற்றும் வளைக்கக்கூடிய (Folding Shock) சைக்கிள்களும் அவற்றில் அடங்கும். 

சிறுவர்களோடு பெரியோர்களுக்கும் மிதிவண்டி சவாரியை குதூகல பயணமாக்கவல்ல டொமாஹோக் சைக்கிள்கள் வாழ்க்கையின் சாகச அனுபவங்களுக்கு புதிய அர்த்தத்தை வழங்குகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் டொமாஹோக் சைக்கிள்களை எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்திய நாளிலிருந்து உள்நாட்டு சைக்கிள் சந்தையில் அது புரட்சிகரமான தெரிவாக மாறியது. ஆண், பெண், சிறுவர் மற்றும் விளையாட்டுக்களுக்கு பொருத்தமான சைக்கிள் வர்த்தகநாமமாக டொமாஹோக் மக்கள் நம்பிக்கையினை உச்ச அளவில் வென்று வெற்றி நடைபோடுகிறது. 

பலமிக்க இளமைப்பருவத்துக்கு உகந்த கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்ட மெக்எக்ஸ் மற்றும் பிளெக்எக்ஸ் சைக்கிள்கள் 10வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும், லெனொக்ஸ் சைக்கிள்கள் 16வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகல மவுன்டன் வகை சைக்கிள் வடிவங்களும் இரட்டை டிஸ்க்ப்ரேக் தொகுதியினையும் 18விதமான வேகத்தினையும் கொண்டுள்ளதோடு இச்சைக்கிள்களுக்கு 11வருட உத்தரவாதமும் வழங்கப்படும். 

இலங்கையின் சைக்கிள் விற்பனையின் முதல்வனான டொமாஹோக் சைக்கிள் நிறுவனமானது பிள்ளைச் செல்வங்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் புலமைப்பரிசில் செயலமர்வையும் நடாத்துகிறது. பல்வேறுபட்ட வகையிலான சைக்கிள்கள் கொழும்பு 04, காலிவீதி, 245/பீ இலக்க முகவரியில் (திருக்குடும்ப கன்னியர்மடம்) அமைந்துள்ள டொமாஹோக் சைக்கிள் நிறுவனத்தின் காட்சியறையில் உள்ளன. விற்பனைக்குப் பின்னும் சிறந்த சேவையினை வழங்கும் டொமாஹோக் நிறுவனமானது, இப்பொழுது tomahawkbike.webxpay.com என்ற இணையத்தளத்தின் ஊடாக வீட்டிலிருந்துகொண்டே தமக்கு தேவையான சைக்கிளை ஆடர்செய்து தருவித்துக்கொள்ளக்கூடிய வசதியினையும் செய்து கொடுத்துள்ளது.

Comments