அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் | தினகரன் வாரமஞ்சரி

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

இராமு, சோமு என்று இரு நண்பர்கள் இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்றனர். இராமுவோ தந்தை ஆசிரியருக்கு பணிவும், நல்ல பண்பும் நல்லொழுக்கமும் நேர்மையும் உடையவன். சோமு இதற்கெல்லாம் நேர்மாறானவன்.

இராமு காலையில் எழுந்ததும் அம்மா அப்பாவுக்கும் உதவி செய்வான். அவர்கள் சொற்படி நடப்பான். காலைக் கடன்களை முடித்து பெற்றோரின் ஆசீர்வாதம் பெற்று பாடசாலைக்குச் செல்வான், சோமு பெற்றோரின் சொற் கேளாது பணத்தை திருடிக்கொண்டு செலவழிப்பான். இவனுக்கு இராமு எவ்வளவோ  புத்திமதிகள் கூறினான். ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அவர்கள் மனம் வேதனைப்பட்டால்.

நாம் வாழ்வில் முன்னேற்றமடைய முடியாது என்று பல தடவைகள் கூறியும் எதையும் கேட்டுக்ெகாள்வதில்லை. அவன் செய்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் அவனிடம் இருந்தன. ஆசிரியருக்கும் அவன் பணிவதில்லை. ஒரு நாள் பாடசாலைக்கும். போவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றவன். இதைப் பெற்றோர் அவனிடம் கேட்டபோது அவன் பெற்றோரை அடித்தான். திட்டினான் அவர்களை நண்பர்களுடன் கூடிசினிமா பார்க்க சென்றான்.

அங்கே நண்பர்களுக்குள்ளே வாக்குவாதம் ஏற்பட்டு கைச் சண்டையாக மாறியது. இதைக் கண்ட முகாமையாளர் இடையில் புகுந்து அடித்ததில் இவன் கால் முறிந்தது. மருந்துவ மனையில். அனுமதிக்கப்பட்டான். இதையறிந்த இராமு இவனைப் பார்ப்பதற்காக அங்கே சென்றான். அப்பொழுது சோமு அடே இராமு நீ சொன்னதை நான் கேட்டிருந்தால் எனக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காதே – அன்னையையும் தந்தையையும் மதிக்காதற்கு இறைவன் கொடுத்த தண்டனை தான் இது என்றான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உணர்ந்தான்.

ஏ.ஆர். ரஸ்மினா,
ஆண்டு 7A,
ப/ அல் இர்ஷாட் ம.வி.
ஹாலி எல.

Comments