பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமிக்கு சிறந்த தொழில் முயற்சியாளர் விருது | தினகரன் வாரமஞ்சரி

பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமிக்கு சிறந்த தொழில் முயற்சியாளர் விருது

பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமி தமது ஆற்றலை மீண்டுமொருமுறை நிரூபிக்கும் வகையில் தேசிய தொழில் முயற்சியாளர் விருது விழாவில் கல்விச்சேவைகள் பிரிவின் சிறந்த நிறுவனமாக விருது பெற்றுள்ளது.  

இலங்கை தேசிய வணிகசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது விழா அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமியின் 15ஆண்டுகால வரலாற்றில் சுவிற்சலாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமைகயத்தில் நடைபெற்ற 07ஆவது உலக விஞ்ஞான காங்கிரசில் உலகின் சிறந்த ஆங்கிலமொழி போதனா கல்லூரியாக (2016) தெரிவுசெய்யப்பட்டதோடு MASSCO விருது விழாவில் 2016, 2017மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் சிறந்த ஆங்கில அக்கடமியாகவும் மகுடம் சூடிக்கொண்டது. பிரிட்டிஷ்வே நிறுவனம் SLIM வர்த்தகநாம (2017) விருதினையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்நிறுவனத்துக்கு ISO 9001 – 2008தரச்சான்றிதழும் கிடைத்துள்ளது. எல்லா மாணவர்களுக்குள்ளும் தனிநபர் ஆற்றல் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியடைவதற்கான எல்லையில்லா திறமை உள்ளதென்பதை பெரிதும் நம்பும் பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமி, மொழியை கற்பிக்கும் அதீத நிபுணத்துவத்தை கொண்டுள்ள ஆசிரியர் குழாமொன்றின் கீழ் மாணவச்செல்வங்களின் ஆற்றலை மேம்படுத்துகிறது. மாணவனுக்குள் பெறுமதிமிக்க தனிநபர் ஆற்றல்களை விருத்தி செய்யும் சுயமதிப்பீடுகளின் அடிப்படையில் சிறந்ததொரு செயன்முறையின் மூலம் ஆங்கிலமொழியை கற்பிக்கின்றது. மாணவனை தன்னம்பிக்கைமிக்க ஓர் ஆளுமையாக உலகத்தை எதிர்கொள்வதற்கு தயார்படுத்தும் இக்கற்பித்தல் செயற்பாடு இன்று பெரிதும் பிரபல்யம் அடைந்துள்ளதை காணலாம். பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமியில் மாணவர்களுக்கு நேர்முகப்பரீட்சையில் எவ்வாறு தோற்றுவது?, உணவு மேசை சம்பிரதாயங்கள், தலைமைத்துவம், மேடையில் உரையாற்றுதல் போன்ற விடயங்களில் சிறந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.  

பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமியின் கல்வி வேலைத்திட்டத்துக்கு பெரும்மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளதோடு பெரும் நிறுவனங்கள் மத்தியில், இதன் சான்றிதழ்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வாழ்நாள் முழுவதுக்குமான ஆங்கிலக்கல்வியை வழங்கும் பிரிட்டிஷ்வே ஆங்கில அக்கடமி மாணவர்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பாடநெறிகளை வழங்குகிறது.

Comments