மிரிஸ்ஸவில் உல்லாச அடுக்கு மாடி வீடுகள் | தினகரன் வாரமஞ்சரி

மிரிஸ்ஸவில் உல்லாச அடுக்கு மாடி வீடுகள்

நாட்டின் தென் கரையோர பிரதேசமான மிரிஸ்சவில் விசாலமான அடுக்க மாடிக் குடியிருப்பு கட்டடங்களை Elysian Mirissa என்ற பெயரில் இலை சியன் ரியாலிட்டி பிரைவட் லிமிட்டட் நிறுவனம் நிர்மாணித்து வருகிறது.

ஒரு மீன்பிடிக் கிராமமாக மட்டும் அறியப்பட்டு வந்த இந் நகரம், இன்று அழகிய கடற்கரை நகரமாகவும் உல்லாச பயணத்துக்கு ஏதுவான அனைத்து வளங்களைக் கொண்டதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. இக் கடலில் எண்ணெய்த் திமிங்கிலங்கள் முதல் அரிதான நீலத் திமிங்கலங்கள் வரை உலா வருகின்றன.  

இங்கு முதல் கட்டமாக அமைக்கப்பட்ட அடுக்கு மனைக் கட்டடத்தில் 154மனைகள் பூர்த்தியடைந்துள்ளன. இலைசியன் மிரிஸ்ஸ வீடமைப்புத் திட்டம் 2021/22காலப்பகுதியில் முற்றிலும் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

முதல் கட்ட அடுக்கு மனைகளில் 75% வீதமான மனைகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளது. இங்கு வீடுகளை வாங்குவதற்கான காலம் கடந்துவிடவில்லை என்பதால் வீடுகளை வாங்க விரும்புவோர் இந் நிறுவனத்தோடு தொடர்பு கொள்ளலாம். 522 முதல் 1,182 வரையான சதுர அடி விஸ்தீரணம் கொண்ட ஒன்று முதல் மூன்று படுக்கை அறைகள் கொண்ட மனைகளை 99,950 அமெரிக்க டொலர்களுக்கு வாங்கலாம். மேலும் 2,254 முதல் 3, 012 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட மூன்று மற்றும் நான்கு படுக்கையறை கொண்ட விசாலமான உல்லாச மனைகளும் விற்பனைக்கு உள்ளன.  

Comments