அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!! | தினகரன் வாரமஞ்சரி

அன்னையர் தின நல்வாழ்த்துகள்..!!

அனுதினமும் நமைச் சுமந்து...
அணுவணுவாய் அங்கமெல்லாம் நொந்து...
அடிவயிறு வலித்து...
அலறியடித்து அழுது துடித்து...!!
அகிலத்தில் பெற்றெடுத்து...
அரைநொடியை அடுத்து...
அனைத்து வலிகளையுமே மறந்து...
அன்னையவள் ஆனந்தக்கண்ணீர் விடுவாள் மகிழ்ந்து...!!
அம்மா என்ற அந்தஸ்தைப் பெற்று...
ஆறுதலும் அடைந்து...
ஆசையாக அள்ளி அணைத்து...
ஆனந்தம் கொள்வாள் ஆண்டவனைத் துதித்து...!!
ஈரைந்து மாதங்கள் கருவறையில் சுமந்து...
ஈன்று எடுத்த அன்னைக்கு...
ஈடேற்றம் கிடைத்து...
ஈருலக வெற்றியும் கிட்ட பிரார்த்தித்து...!!
உலகில் பிறப்பதற்கு முன்பு...
உணர்வுகளால் தொட்டு உணர்ந்து 
உம்மா என்று அழைக்கும் முன்பு...
உதிரத்தைப் பாலாய்த் தந்து...!!
உறக்கம் மறந்து கண் விழித்துக் காத்திருந்து...
ஊண் உறக்கம் நமக்குக் கொடுத்து...
உயர்ந்து வாழச் செய்து...
ஊரே போற்றச் செய்த அன்னைக்கு...!!
எளிமையாக வாழ்ந்து...
ஏட்டுக் கல்வி நமக்குக் கொடுத்து..
எல்லாமாக இருந்து...
ஏற்றமாக வாழச்செய்த அன்னைக்கு...!!
ஐயங்களை மறக்க வைத்து ஆறறிவைக் கொடுத்து..
ஐந்தறிவு மிருகங்களை விடச் சிறக்கச் செய்து..
ஐம்புலன்களையும் வெல்ல வைத்து ...
ஐஸ்வர்யமாய் வாழச் செய்த அன்னைக்கு...!!
ஒருநொடி கூட வீணாக்காது நமக்காகவே வாழ்ந்து...
ஒருசிறு கஷ்டம் நமக்கென்றால் உயிர் துடித்து... 
ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து...
ஒழுங்காக வாழச்செய்த அன்னைக்கு...!!
ஓவியமாய் நமை வரைந்து அழகு பார்த்து..
ஓங்கி உயர்ந்து வாழச் செய்து..
ஔடதமும் கொடுத்து...
ஔடதமாய் வாழ்ந்த எனது  அன்னைக்கும்..
அன்னையர்; அன்னையராகப் போகும்  அனைவருக்கும்..
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!!
 
செ. பாத்திமா றிப்னா 
ஒலுவில்

Comments