உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் சமாதான தினம் | தினகரன் வாரமஞ்சரி

உயிரிழந்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் சமாதான தினம்

ஜனாதிபதி தலைமையில் இன்று

நாட்டில் மூன்று தசாப்தங்களாக நிலவிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்று சனிக்கிழமையுடன் 10ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இன்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கருகில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் 3.30இற்கு நடைபெறவுள்ளது. 

இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராணுவத் தளபதிகள், யுத்தத்தின்போது உபாதைக்குள்ளான இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.  

இதேவேளை, இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் இன்று 19 ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளும் இந்தக் காலப்பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments