ஐ.நா., சர்வதேச சமூகம் வெறுமனே அவதானித்துக்கொண்டிருப்பது கவலை | தினகரன் வாரமஞ்சரி

ஐ.நா., சர்வதேச சமூகம் வெறுமனே அவதானித்துக்கொண்டிருப்பது கவலை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  மே 18 பிரகடனத்தில் தெரிவிப்பு

முள்ளிவாய்க்கால் விடயத்தில் ஐ.நாவும் சர்வதேச சமூகமும் வெறுமனே அவதானித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியதென மே 18பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது  

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம்தோறும் மே மாதம் 18ம் திகதி தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது  

அந்தவகையில் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நேற்றுக் காலை பத்து முப்பது மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்தில் நடைபெற்றது  

இங்கு மே 18பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது  

பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  

 தமிழர்கள் ஒரு தேச அங்கீகாரத்திற்குரியவர்கள் என்பதையும் தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் ஒரு போதும் பாரதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன்,  

 மே 18தமிழ் தேச எழுச்சி நாளாகவும் 2019ஆம் ஆண்டை அரசியல் நீதிக்கான சர்வதேச வலு சேர்க்கும் ஆண்டாகவும் பிரகடனம் செய்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அத்துடன் இந்த பிரகடனத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு (வடக்கு- கிழக்கு) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாங்குளம் குறூப் நிருபர்

 

 

Comments