தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்தவாரம் வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

தெரிவுக்குழு உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்தவாரம் வெளியீடு

வன்முறை தடுத்தல், விசாரணை;

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கும், எதிர்காலத்தில் இவை தடுக்கப்படுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான பெயர் விபரங்கள் அடுத்தவாரம் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அவ்வாறு அமைக்கப்படும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவானதுமுழுமையான அதிகாரத்தைப் பெற்றதாகக் காணப்படும் என்பதுடன், இதற்குப் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் உறுப்பினர்களும், பாராளுமன்றத் துறைசார் குழுக்களின் அங்கத்தவர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.  

தெரிவுக்குழுவுக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை அடுத்தவாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சமர்ப்பித்து ஆலோசனை பெற்று பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்.  

வன்முறைச் சம்பவங்களின் பின்புலத்தில் உள்ளவர்கள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான பயங்கரவாதத் தாக்குதல்களும், வன்முறைகளும் இடம்பெறாமல் செய்வதற்கான காரணிகள் தொடர்பில் இந்தக் குழுவான தமது சிபார்சுகளை முன்மொழியும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Comments