Huawei ஸ்மார்ட்போன் சாதனங்களில் தரவு சேமிப்பிற்கு அதிகரித்த இடவசதி | தினகரன் வாரமஞ்சரி

Huawei ஸ்மார்ட்போன் சாதனங்களில் தரவு சேமிப்பிற்கு அதிகரித்த இடவசதி

நாம் விரும்புகின்ற எதனையும் ஸ்மார்ட்போன் மூலம் பெறக்கூடிய தற்போதைய யுகத்தில், மொபைல் தொலைபேசியின் உள்ளக தரவு சேமிப்பு இட வசதியைப் பொறுத்தவரையில் அதிசிறந்த கொள்ளளவு ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது.  

அன்ட்ரொயிட் (Android) இனைப் பொறுத்தவரை, பெருந்தொகை சாதனங்கள் கிடைக்கப்பெறுவதுடன், அவை அனைத்துமே வெவ்வேறு அளவுகளிலான உள்ளக தேக்குதிறன் அளவு மற்றும் RAM இனைக் கொண்டுள்ளன. விலைகளைப் பொறுத்து எமது தெரிவுகளும் மாறுபடுவதுடன், சிலவருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையுடன் ஒப்பிடுகையில், உற்பத்தியாளர்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளனர் என்பதை எம்மால் காணக்கூடியதாக உள்ளதுடன், குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை எடுத்துக் கொண்டால் 3GBmsTRAM மற்றும் 32GB தேக்கக வசதி என்பன சாதாரண நியமங்களாக மாறியுள்ளன. இக்காரணத்தால் அன்ட்ரொயிட் அல்லாத தொலைபேசி பாவனையாளர்களுடன் ஒப்பிடுகையில், அன்ட்ரொய்ட் பாவனையாளர்களின் வாழ்வு இலகுவானதாக காணப்படுகின்றது.   Huawei Y5 Lite மற்றும் Y5 Prime போன்ற Huawei ஸ்மார்ட்போன்கள் அடிப்படைவகுப்பைச் சார்ந்த ஸ்மார்ட்போன்களாக காணப்படுவதுடன், அதிகரித்த அளவில் உள்வாரி RAM தேக்குதிறனை வழங்குவதற்காக ஒருபடிமேலே சென்றுள்ளன. 16 GB முதற்கொண்டு உள்வாரி தேக்குதிறன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சராசரியாக 381புகைப்படங்கள் (12MP), 3500ஓடியோ கோப்புக்கள் (128kbps) மற்றும் 160நிமிட வீடியோ பதிவுகோப்புக்கள் (24mbps) ஆகியவற்றை தேக்கிக் கொள்வதற்கு இடமளிக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகளவு RAM இனைக் கொண்டிருப்பது அதிகமான வேலைப்பளுவிலிருந்து இயக்கிக்கு (processor) விடுவிப்பினை அளிப்பதுடன், அதன் மூலமாக விலைமதிப்பற்ற பொறிமுறை சக்கரங்களை சேமித்து, ஸ்மார்ட்போனின் மின்கலத்தின் செயற்திறனை அதிகரிக்கச் செய்கின்றது.

அத்துடன் மேம்பட்ட செயற்திறன் மற்றும் வேகமான பயன்பாட்டு செயற்படுத்தல் நேரத்திற்கும் இது இடமளிப்பதுடன், பாவனையாளருக்கு சீரான மற்றும் இலகுவான ஸ்மார்ட்போன் அனுபவத்தையும் வழங்குகின்றது.  

Comments