நாள், கோள் நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள் நற்பலன்

மேஷம் 

மனதிற்குப் பிடித்த நல்ல செய்திகளுடனும், பண வரவுகளுடனும் இந்த வாரம் ஆரம்பமாகும். எனினும் அடுத்ததாகப பிரச்சினைகளும் தொடரவே செய்யும். இருப்பினும் மனமும் தேகமும் சுப சௌக்கியமாகவே இயங்கும். இல்லற சுகங்களும், இனிதான உறவுகளும் மகிழ்ச்சியின் எல்லை வரை இட்டுச் செல்ல சந்தர்ப்பமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளின் பலன்கள் முழுத் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதனால் வியாபார விருத்திகளும், பொருள் லாபங்களும் சிறப்பாகவே அமைய இடமுண்டு. வராத கடன்களும் தீர்ந்து போன உறவுகளும் திரும்பி வரும். அரச உத்தியோகத்தர்கள் சற்று எச்சரிக்கையுடன் இயங்குவது சாலச் சிறந்தது. கோள் மூட்டல்கள் குழப்பங்களைக் கொண்டு வரலாம்.

சிக்கலில் அகப்பட்டுக் கொள்ள மாட்டீர்கள்.     அஸ்வினி,பரணி கார்த்திகை நட்சத்திரங்களுக்கு செவ்வாய்க்கிழமை படுபட்சி நாளாகும்.

ரிஷபம்

கொஞ்சம் சிக்கலான வாரமே. நடக்கவேண்டும் என்று ஆவலோடு எதிர் பார்த்தவைகள் தலை குப்புறக் கவிழ, நினைத்தற்கு மாறாகக் காரியங்கள் நடைபெறுவதைத் தடுக்கவோ தவிர்க்கவோ இயலாமல் ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால்; அவைகள் தோல்விகள் அல்ல. முக்கியமாகத் திருமண விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் படும்பாடு, பாவம் கஷ்டம்தான். எப்படியோ ஒரு வாழ்க்கைத் துணைதானே வரப்போகிறது ஏன் ஏமாற்றமாய் நினைக்க வேண்டும்? வியாபாரிகளுக்கு பெருத்த லாபங்கள் இல்லையென்றாலும் போதுமான வருமானங்கள் கிடைக்கவே செய்யும். அரச தொழில் புரிவோர், அரச ஆதரவில் தொழில் செய்வோர் நன்மைகள் அடையலாம். பொருள் வரவுகளை எதிர் பார்க்கலாம். உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.   கார்த்திகை ரோகிணி,மிருகசீரிடம் நட்சத்திரங்களுக்குச் செவ்வாய்க்கிழமை படுபட்சி நாளாகும்.

மிதுனம்

என்னதான் விலகிப்போக நினைத்தாலும் தொல்லைகள்  வரிசையாக ஒரு கை பார்க்கிறேன் என்று தொடர்கிறதே என நிலை குலைந்து போய் இருப்பது விளங்குகிறது, ஆனாலும் பொறுமை ஒன்றேதான் வழியாகும் என்பதைத்தான் சொல்ல முடியும், சற்றுப் பொறுங்கள் எல்லாம் நல்ல படியாய் முடிவடையும். தொழில் துறைகளில் பங்காளிகளும் பிரச்சினைகளைக் கிளப்ப, வேலை செய்வோரும் முன்னுக்குப் முரணாக நடப்பது தாங்க முடியாதத் துயரங்களாகவே உருவாகும். போதாக் குறைக்கு இல்லறத்தில் உள்ளவர்களும் சென்னபடி கேட்காமலும், தாம் விரும்பியதே சரியென்ற நிலைப்பாடுடன் வாதங்கள் செய்வார்கள். ஒரு தடவை இவையெல்லாம் எப்படி ஒன்றாகக் கூடி வருகின்றனவே என்று எண்ணத்தான் தோன்றும்.

மிருகசீரிடத்திற்குச் செவ்வாய்க்கிழமையும், திருவாதிரை, புனர்பூசத்திற்கு திங்கட்கிழமையும் படுபட்சி நாட்களாகும்

கடகம்

சராசரியாகத் தொழிலும், வருமானங்களும் நடக்கும். புதிய முயற்சிகள் நன்மைகளைச் செய்யச் சந்தர்ப்பங்கள் இல்லை. இருப்பதைக் கட்டிக் காப்பதே பெரிய வெற்றியாகும். ஆசை காட்டிப் பொருள் தேடிக் கொள்ள வழிகள் தென்படுவதைப் போலத் தெரிந்தாலும் அவைகளை நம்பி அடி எடுத்து வைத்தால் பாதாளத்தை நோக்கிய பயணமாகவே அது அமையும். அவசரமும், அவதியும் படாமல் காலம் வரை காத்திருப்பதே புத்திசாலித் தனமாகும். அரச, தனியார் துறைகளில் உள்ளவர்கள் அதிக பட்சமாக எதையும் எதிர் பாராமல் இருப்பது நல்லது. பெண்கள் தாம் செல்லும் வழிகளில் நிதானத்தைக் கடைப் பிடிப்பதே உத்தமம்.

26ம் திகதி ஞாயிறு காலை முதல் 28ம் திகதி நள்ளிரவு 12.06வரை சந்திர அஸ்ட்டமம் ஆகும்.

புனர்பூசம், பூசம், ஆயிலியம், நட்சத்திரங்களுக்கு திங்கட்கிழமை படுபட்சி நாளாகும்.

சிம்மம்

தொழில் துறைகளில் அதிகமான ஈடுபாட்டைக் காட்ட வேண்டிய வாரம். சத்ருக்களின் சவால்கள், இடையூறுகள் அதிகமாக இருப்பதைப் புரிந்து, நடந்து கொள்வது அத்தியாவசியமாகும். உறவினர்கள், நண்பர்கள் விலகி நிற்பதும் நடக்கும். குடும்பத்தவர்களும் ஏனோ தானோவென நடப்பதும், மனம் கிலேசம் அடைவதும் இருக்கும். அரச, அந்நிய இடங்களில் தொழில் புரிவோர் சற்று நிதானத்துடன் விலகி நிற்பது சிறந்தது. பெண்களுக்கும் நல்ல வாரம் இல்லை. திரும்பிய திசைகளில் எல்லாம் வீண் சச்சரவுகள் வருவதும், சம்பந்தமில்லா இடங்களில் இருந்து விமர்சனங்களையும் கேட்க நேரும்.  ஆன்மீகச் செலவுகளைத் தவிர வேறு எந்தச் செலவுகளையும் ஏற்காது இருத்தலும், கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடாதிருப்பதும் நஷ்டங்களையும், மன உளைச்சலையும் தவிர்க்க உதவும்.

மகம், பூரத்திற்கு திங்கட்கிழமையும், உத்தரத்திற்கு ஞாயிறு படுபட்சி நாட்களாகும்.

கன்னி

விருந்துகளும் சந்தோஷங்களுமாக இந்த வாரம் துவங்கும். உறவினர்களும், நண்பர்களும் மகிழ்ச்சியுடன் உங்களைச் சுற்றி வருவார்கள். இல்லறத்திலும் சந்தோஷத்திற்குக் குறைவு இருக்காது. நஷ்டமே என்று நினைத்தவைகள் தடுமாறி லாபங்களாக மாறும் அதிசயமும் நடந்தேறும். நினைவில் கொள்ளுங்கள் ஒவ்வொரு தவறுகளும் இப்படியே திரும்பி நல்லதாக முடியாது: முடிவதும் நடக்காது. ஜெயலட்சுமி முகம் பார்ப்பதினால் மட்டுமே இது நடக்கும். பொழுது போகத்தானே வேண்டும், அவமானகரமாக தலைக் குனிவும் தொடரும், எச்சரிக்கை அவசியம். இளைய சகோதரர்களினால் பிரச்சினைகள் வந்து சேரலாம். பொறுமையாகக் கையாளுங்கள், பின்னர் அவர்கள் தேவைப்படுவார்கள். பெண்கள் சந்தோஷமாக ஊர் சுற்றி மகிழலாம், உத்தியோகம் செய்யும் அன்பர்கள் வேறு வழியில்லை பல சங்கடங்களைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.  உத்தரம், அத்தம், சித்திரை நட்சத்திரங்களுக்கு ஞாயிறு படுபட்சி நாளாகும்.

விருச்சிகம்

கொட்டும் தேளாக, சுடு சொல் மன்னனாக இருப்பதில் இருந்து விலகி மனிதர்களோடு மனிதர்களாக வாழப்பாடு படுங்கள். யாருக்குத்தான் தொழிலில் சிரமங்கள் இல்லை, நஷ்டங்கள் வராமல் இல்லை, மைனஸ் குறியை பிளஸாக மாற்ற நிச்சயமாக முடியும், கொஞ்சம் நிதானமாக யோசித்துச் செயல்பட்டாலே போதும். வெற்றிக் கொடியோடு போராடப் போனவர்களை விட வேறு வழியில்லாமல் போராடி வீரர்களாய் ஆனவர்களே அதிகம் உண்டு இந்த உலகில், ஆகவே துணிந்து நில்லுங்கள். குடும்பம் உங்களை அனுசரிக்காமல் விட்டால் கவலையில்லை, அவர்களோடு நீங்கள் ஒத்து உழையுங்கள், தானக வழிக்கு வருவார்கள். உத்தியோகம், தனியார் துறைகளில் உள்ளவர்கள் தலை குனிந்தாவது தமது நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். விசாகத்திற்கு ஞாயிறும், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களுக்கு வியாழனும் சனியும் படுபட்சி நாட்களாகும்.

தனுசு

தலையில் சுமையோடு நடக்கும் போது கால் தடுக்கி தடம் புரண்டவர்கள்; போல் தடுமாறிக் கொண்டிருக்கும் அன்பர்களே, தொட்ட தொல்லாம் எல்லையற்ற தொல்லையில் கொண்டு போய் விடுவதைத் தடுப்பதெப்படி என்ற யோசிக்கிறீர்களா? வியாபாரத்தில் வீழ்ச்சி, வருமானங்களில் குறைவு, பங்காளிகளின் இடையூறுகள், வேலையாட்களின் முரண்பாடுகள் இவைகளை எதிர் கொள்ளத்தான் வேண்டும். விரயங்களும், வீண் அலைச்சல்களும் தனது பங்குத் துன்பங்களைத் தரும். இவையெல்லாம் கடந்து தலை நிமிர்த்தி மனிதனாக எழ நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியை நோக்கித்தான் நகரும். மூலம், பூராடம், உத்தராடம், நட்சத்திரங்களுக்கு வியாழனும் சனியும் படுபட்சி நாட்களாகும்.

மகரம்

எப்படிச் சமாளிக்கப் போகிறேனோ, இப்படிப் பெரிய விரயங்கள் வருகின்றனவே என்று சிந்திக்கும் நிலைதான் என்றாலும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வரவுகளும் வந்து சேர்வதினால் மனது ஓரளவு அமைதி கொள்ளும். சம்பந்தம் இல்லாத் தகராறுகளும், வாதப் பிரதி வாதங்களும் மன உளைச்சலைத் தரவே செய்யும். ஒதுங்குவது அப்படி ஒன்றும் இலகுவான காரியமாக இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் முட்டுக் கட்டைகள் தாங்க வொண்ணாத சுமையாகத்தான் இருக்கும். உறவுகளும், நண்பர்களும் போதிய சகாயங்களைச் செய்வார்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் பெரிய நன்மையாக அமையும். மாதர் குல திலகங்களே பொறுமையாக குலத்திற்கு குந்தகம் வராமல் அமைதி காத்தால் அதுவே சிறப்பாகும். உத்தராடத்திற்கு வியாழனும் சனியும், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களுக்கு புதனும், வெள்ளியும் படுபட்சி நாட்களாகும்.

கும்பம்

தொழிலில் வருமானங்கள் போதுமானதாக இருப்பதினால், கவலையில்லாமல் நினைத்தபடி வாக்கு வாதங்களில் ஈடுபட்டும், அலட்சியமாகவும் நடக்கத் தோன்றும். குழப்பங்களை உருவாக்கி அதில் மீன் பிடிக்கும் உத்தியையும் கையாள முயல்வீர்கள், அதில் லாபங்களும் கிடைக்கப் பெறும். உறவினர் சேர்க்கைகளும், சகாயங்களும் உண்டு. தொழில் முயற்சிகளில் ஏற்கனவே தள்ளிப் போயிருந்த விவகாரங்கள் நடை முறைக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. தொழில்; அபிவிருத்திகளுக்கு முயற்சிகளைத் தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்ப உள் விவகாரங்களில் எதிர்பாராத சங்கடங்கள் வந்து நிம்மதியைக் குலைக்கும். தொழில் செய்வோர் மேலதிகாரிகளின் உதவிகளையோ சகாயங்களையோ எதிர் பார்க்காமல் இருப்பது சிறப்பாகும். தொழிலைக் காப்பாற்ற தங்கள் கௌரவத்தை இழக்காமல் இருந்து கொள்ளல் முக்கியமாகும்.

அவிட்டம்,சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களுக்கு புதனும், வெள்ளியும் படுபட்சி நாட்களாகும்.

மீனம்

பல மாதங்களுக்கு முன் கை விட்ட சில முயற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டி ஏற்படும். அதற்கான கால கட்டம் இப்போது வந்துள்ளது. புதிய தொழில் முயற்சிகள், அல்லது தொழில் விரிவாக்கம் என்பன நல்ல பலனைத் தரும். பணத் தட்டுப்பாடு இப்போது இருந்தாலும் அவைகள் சரி செய்யப்பட்டு யாவற்றையும் முன்னெடுக்க முடியும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பொருளாதார உதவிகளைப் பெறலாம். குடும்பச் சூழல் சாதகமாகவே இருக்கும். மருத்துவச் செலவுகளும் உண்டு. ஆனால் அவைகள் எல்லை மீறிப் போகாது. திருமணம் இதுவரை நடைபெறாதவர்கள் துணிந்து அந்த முயற்சிகளில் இறங்கலாம். நிலைமை சாதகமாகவே இருக்கிறது. முக்கியமாகப் பெண்கள் தனக்கு வேண்டிய வரனை நச்சரித்துக் காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி. நட்சத்திரங்களுக்கு புதனும், வெள்ளியும் படுபட்சி நாட்களாகும்.

Comments