அமைச்சர்களின் பதவி விலகல்; அரச வர்த்தமானி வெளியீடு | தினகரன் வாரமஞ்சரி

அமைச்சர்களின் பதவி விலகல்; அரச வர்த்தமானி வெளியீடு

ஒன்பது முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல் தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு நேற்று முன்தினம் ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 

அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாஸிம், அப்துல் ஹலீம் ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாகவும், பைசல் காஷிம், மொஹமட் ஹரீஸ், அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா ஆகியோர் பிரதி அமைச்சுப் பதவிகளிலிருந்தும், அப்துல்லா மஹ்ரூப் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்தும் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த 03ஆம் திகதியிலிருந்து, இந்த அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பொறுப்புகளிருந்து தாங்களாகவே விலகியுள்ளனர் என்றும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Comments