படிக்கும் பிள்ளை, எங்கும் படிக்கும்! | தினகரன் வாரமஞ்சரி

படிக்கும் பிள்ளை, எங்கும் படிக்கும்!

பாடசாலைகள்ல முதலாம் வகுப்புக்குப் பிள்ளைகளைச் சேர்க்கிறதுக்கான விண்ணப்பங்கள அனுப்புற வேலை இப்ப நடந்துகொண்டிருக்கு. எல்லாப் பெற்றாரும் பிரபலமான பாடசாலைகள்ல தங்கட பிள்ளைகளைச் சேர்க்கிறதுக்குத்தான் எதிர்பார்க்கிறாங்க. அங்கப் போய் பிள்ளை படிக்காட்டிலும் பரவாயில்லை, பெரிய பிரபல ஸ்கூல் கிடைச்சால் போதும் என்றதுதான் அவங்கட இலக்கு!

ஏனென்று சொல்லிச் சொன்னால், பிள்ள எந்தப் பள்ளிக்கூடத்திலை படிச்சான் அல்லது படிக்குது என்று கேட்கும்போது பெரிசாச் சொல்லிப் பீற்றிக்கொள்றதுக்காகத்தான் என்கிறார் நண்பர். அப்பிடி ஒரு காலம் இருந்ததுதான். பள்ளிக்கூடத்தின்ர பேரைச் சொன்னாலே ஒரு மதிப்பும் மரியாதையும் கொடுப்பாங்கள். ஆனால், இப்ப அப்பிடியொரு நிலைமை இருக்கிறதா எண்டு தெரியல்ல.

இலங்கையிலை சுமார் பத்தாயிரத்து நூறு பள்ளிக்கூடங்கள் இருக்கு. அதிலை 32மட்டுந்தான் ஜனரஞ்சகமான பாடசாலைகள். அந்த 32இலையும் கொண்டுபோய் எல்லாப் பிள்ளைகளையும் சேர்க்க முடியுமா? முடியாது. அதனாலைதான் 'லங்கம பாசெல, ஹொந்தம பாசெல' என்ற ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கு. அதாவது, அருகில் உள்ள பாடசாலை, சிறந்த பாடசாலை திட்டம்.

ஜனரஞ்சகமான பாடசா​ைலயிலை அப்பிடி என்னதான் இருக்கு? பிள்ளை எந்தப் பாடசாலையிலை படிச்சாலும், டியூசன் போய்தான படிக்குது?! டியூசன்ல படிச்சுப் பாஸானோன, பேரெல்லாம் அந்தப் பள்ளிக்கூடத்திற்குத்தான் போகுது. படிச்சுக்ெகாடுத்த டியூசன் மாஸ்டருக்குப் போகாது. அப்பிடி இருக்கும்போது, பிள்ளைகளை எந்தப் பாடசாலையிலாவது சேர்த்துவிட்டிட்டுட் டியூசன் அனுப்ப வேண்டியதுதானே! என்று சொல்கிறார் நண்பர்!

இது கதைக்கிறதுக்குச் சரியாக இருக்கும். ஆனால், நாங்கள் யதார்த்தமாய் சிந்திச்சுப் பார்க்க ​வேணும். ஜனரஞ்சகமான பாடசாலைகள்ல வெறும் படிப்பு மட்டும் இல்லை. அங்க நல்ல திறமையான பிள்ளைகள மாத்திரமில்லாமல், நல்ல மனிதர்களையும் உருவாக்குகிறார்கள். பிள்ளைகளைச் சகல துறைகளிலும் மிளிரச் செய்து நாளை உலகத்திற்கு எப்பிடி முகங்கொடுப்பது என்றதைச் சொல்லிக்ெகாடுக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பிள்ளைகளுக்கு வாழ்க்ைகயைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில், கல் அல்லது வெளியில் போ! என்பதை அவர்களின் தாரக மந்திரமாக வைத்திருக்கிறார்கள். முதலாந்தரத்திலிருந்தே புறக்கிருத்திகை செயற்பாடுகளில் பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்கள். குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு தடவையாவது வாழ்வியல் சம்பந்தமான ஒரு நாடகத்தை ஒரு பிள்ளை அரங்கேற்றுகிறது. வகுப்பில் உள்ள சகல பிள்ளைகளும் ஏதோவொரு செயற்பாட்டில் பங்கேற்க வேண்டும். இப்பிடி ஒரு சில பாடசாலைகளில்தான் இப்பிடிச் செய்கிறார்கள். அதனால், அந்தப் பாடசாலைகளில் பயிலும் பிள்ளைகள் எந்தப் பிரச்சினைக்கும் முகங்கொடுக்கும் வல்லமையுடன் வளர்கிறார்கள். வாழ்க்ைகயின் எல்லா அங்கத்தையும் கற்றுக்ெகாள்கிறார்கள். ஒரு பிள்ளைக்கு அதுதான் தேவை. பரீட்சையில் சித்தியடைந்தும் உலகம் தெரியாத நிலையிலிருக்கும் பிள்ளையால், இந்த உலகிற்கோ சமூகத்திற்கோ பலன் எதுவும் இல்லை.

அதற்காகத்தான் அருகில் உள்ள பாடசாலை, சிறந்த பாடசாலை என்று அரசாங்கம் அறிமுகப்படுத்தி, தேவையான வசதிகளைப் பெற்றக்ெகாடுக்கிறது. முன்பு ஊரில் உள்ள பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நெருங்கிய பிணைப்பொன்றிருக்கும். அந்த ஊரில் வாத்தியார் என்றால், அப்பிடி ஒரு மரியாதை, மதிப்பு. இப்ப "வாத்தி போறான்" என்பார்கள் என்கிறார் ஓர் ஓய்வுபெற்ற பணிப்பாளர். இப்ப உள்ள வாத்திமாருக்குத் தொழில் பக்தி குறைவு. முன்பு ரியூஷன் நடக்காது. இப்ப எங்குப் பார்த்தாலும் ரியூசன். அவர் பிள்ளை அந்த வாத்தியாரிடம் கற்றுக்ெகாண்டால், இவர் பிள்ளையையும்  அங்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு வீம்புத்தனம் பெற்றோரிடம் குடிகொண்டிருக்கிறது என்கிறார் தணிகாசலம் மாஸ்ரர்.

இப்போது மருத்துவமும் ஆசிரியத்துவமும் பணமுழைக்கும் துறையாக மாறிப்போய்விட்டன என்பது அவரது ஆதங்கம். பாடசாலையில் படிப்பிக்காமல், பிரத்தியேக வகுப்பிற்குச் சென்று படிப்பிக்கும் ஆசிரியர்கள் இருப்பதால்தான் தனியார் வகுப்புகள் காளான்களைப்போல் முளைக்கின்றன என்பது அவரது கருத்து.

ஊரில் உள்ள வாத்தியார் சொல்வதைப் பொலிஸார்கூட நம்பிய ஒரு காலமிருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. அந்தக் கௌரவத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும் என்கிறார் வாத்தியார்.

எனவே, முதலாந்தரத்திற்குப் பிள்ளைகளைச் சேர்க்க எதிர்பார்த்திருக்கும் பெற்றோர்கள், உண்மையான தகவல்களைக் கொடுத்து தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க பாருங்கள் என்கிறார் அவர். தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் போலியானவற்றைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அருகில் உள்ள பாடசாலைகளுக்குத் தயங்காமல் விண்ணப்பியுங்கள். எல்லாத் திறமைக்கும் அங்கே ஆக்கமும் ஊக்கமும் கிடைக்கும். அத்துடன் ஒரு மாகாணத்தில் நீங்கள் விரும்பிய ஆறு பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்கும் பிள்ளை எந்தப் பாடசாலையிலும் படிக்கும். அதுதான் உண்மை. கடந்த காலத்தில் வௌிவந்த பெறுபேறுகளைப் பார்த்தால், மிகச் சாதாரணமான பாடசாலைகளில் பயின்ற பிள்ளைகள்தான் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தேசிய ரீதியில் முதலிடத்திக்கு வந்தார்கள். இதிலிருந்தே எந்தப் பாடசாலை சிறந்தது என்பதை நீங்கள் விளங்கிக்ெகாள்ள முடியும்!

Comments