பிள்ளைகளின் 24/7 பாதுகாப்பினை உறுதி செய்யும் TrackieX கண்காணிப்புக் கருவி | தினகரன் வாரமஞ்சரி

பிள்ளைகளின் 24/7 பாதுகாப்பினை உறுதி செய்யும் TrackieX கண்காணிப்புக் கருவி

இலங்கையைச் சேர்ந்த தொடக்கநிலை வணிக நிறுவனமான TrackieX, TrackieX Kids 2G எனப்படும் GPS கண்காணிப்புக் கருவியை அண்மையில் அறிமுகம் செய்து வைத்தது. இலகுவாகப் பொருத்தக்கூடிய எளிமையான இந்தச் சிறிய கண்காணிப்புக் கருவியானது, பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பில் கவலைப்படும் பெற்றோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.  

தங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைத்து பெற்றோர்களினதும் கனவாகும். எனினும், வேகமாக நகரும் வாழ்க்கைமுறை காரணமாக பெற்றோர் தங்களது பிள்ளைகளின் அருகில் இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து வருகின்றன.  

பெற்றோரைப் போலவே பிள்ளைகளும் பல்வேறு இடங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் போக வேண்டிய சூழல் காணப்படுகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் தனியாகவே போகவேண்டியிருப்பதால், பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர் கலக்கமடையும் நிலை காணப்படுகிறது.  

TrackieX இன் நவீன கண்காணிப்புக் கருவியின் மூலம், உலகின் மறுபக்கத்தில் இருந்தும் பிள்ளைகளின் இருப்பிடம் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடிவதானது, அவர்களது பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோருக்கு மனநிம்மதியைத் தருகிறது.   புத்தகப்பை அல்லது சட்டையில் இலகுவாகப் பொருத்தக்கூடிய இந்தச் சிறிய கறுப்பு நிறக் கண்காணிப்புக் கருவியானது, உங்கள் பிள்ளைகளை இலகுவாகக் கண்காணிக்க மாத்திரமன்றி, ஆபத்து வேளைகளில் அபாய அறிவிப்புகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.   “ஒரு தந்தை என்ற வகையில் பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பில் கலக்கமடையும் பெற்றோரின் மனநிலையை நான் நன்கறிவேன். அதுமட்டுமின்றி, நாம் அன்றாடம் உபயோகிக்கும் தொலைத்தொடர்பு மற்றும் இலத்திரனியல் சாதனங்களின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாகவே நான் TrackieX  நிறுவனத்தினை ஆரம்பித்தேன். ஒரு தந்தையாகவும், தொழில்நுட்ப வல்லுனராகவும் பெற்றுக் கொண்ட அனுபவங்களைக் கொண்டு, இணையப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான பல்வேறு புதிய அம்சங்களை இந்தக் கண்காணிப்புக் கருவியில் நாம் உள்ளடக்கியுள்ளோம்,” என்று TrackieX நிறுவனர், ஸ்ரீதரன் நடேஷ்குமார் குறிப்பிட்டார்.  

TrackieX Kids 2G கண்காணிப்புக் கருவியானது நீங்கள் அருகில் இல்லாத போதும் பிள்ளைகளைக் கவனிப்பதற்கும் அவர்களது பாதுகாப்புத் தொடர்பில் மனநிம்மதியுடன் இருப்பதற்கும் உதவுகிறது.

Comments