'வாழ்க நீ வளமுடன்' | தினகரன் வாரமஞ்சரி

'வாழ்க நீ வளமுடன்'

துக்கத்தில் அனுதினமும் தூக்கமின்றி நானிங்கே – நீ  
பக்கத்தில் இருப்பதாய் பரிதவித்து பாவியானேன்  
முற்றத்தில் முழு நிலா முகம் காட்டி நிற்க – நீ  
மூன்றாம் பிறைபோல் நிழல் காட்டி நிற்கலாமா? 
காலத்தால் அழியாத காதலோடு நானிங்கே – நீ  
கண்டும் காணாதது போல் காற்றாய் இருப்பதேனோ  
கணவன் மனைவியாய் வாழ கனவு காண்கிறேன்- நீ  
கலைந்து போகும் மேகமாய் ஏனோ? 
பித்தாகி பேதலித்து நிற்கின்றேனே நானிங்கே – நீ  
பிடிக்கவில்லை என்று ஒதுங்கவா பார்க்கிறயா  
விட்டு விடவா முடியும் உன் அன்பை – நீ  
விரைந்து வா என்னைத் தேடி அன்பே! 
வாழ்ந்து காட்டுவோம் தம்பதியாய் பாரினிலே – நீ  
வண்ணத்து பூச்சியாய் என் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  
சூழ்ந்து நிற்கின்றோர் என்னதான் எதிர்த்தாலும் – நீ  
சுகம் பெற்று வாழ நான் உத்தரவாதம்
 
பசறையூர் ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments