கொழும்பில் “PickMe Bike” அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பில் “PickMe Bike” அறிமுகம்

PickMe நிறுவனம், அதன் வெற்றிகரமிக்க 4ஆவது ஆண்டில் விருது வென்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி ஊடாக ‘PickMe Bike’ எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் விரைவானதும், செயற்திறன் மிக்கதும், சகாயமானதுமான முறைகளுக்காக வளர்ந்துவரும் தேவையை அடிப்படையாகக் கொண்டு துரிதமானதும், அதிக செயற்திறன் மிக்கதுமான போக்குவரத்து சேவையை அணுகுவதற்கான வாய்ப்பை பயணிகளுக்கு வழங்கும் குறிக்கோளுடன் இச்சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் தங்கள் கைபேசியில் PickMe செயலியை தரவிறக்கம் செய்து ‘Bike’ எனும் தெரிவை க்ளிக் செய்வது மாத்திரமேயாகும். அதன் பின்னரான செயல்பாடுகள் அனைத்து வழமையாக வாகனமொன்றை பதிவு செய்வதைப் போன்றதாகும். மேலும் PickMe உடன் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ இணைந்துகொள்ள விரும்பும் ஓட்டுநர்கள் PickMe அலுவலகத்திற்கு வந்து தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  

இப்புதிய சேவை குறித்து PickMe இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசிர பெரேரா கருத்து தெரிவிக்கையில், புதிய சேவையான ‘PickMe Bike’ ஐ அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது ஸ்மார்ட்ஃபோன் செயலி ஊடாக வழங்கப்படும் இந்த தனிச்சிறப்பானதும், செளகரியமானதுமான பிரயாண தீர்வானது, PickMe இனால் தற்போது வழங்கப்படும் பயண மட்டத்தை அதிகரிப்பதுடன், இலங்கை போக்குவரத்து துறையின் தரங்களையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.  

இலங்கையின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டடைவதன் உறுதிப்பாட்டில் எமது நோக்கத்தை அனைத்து இலங்கையர்களுக்கு பொருத்தமான தீர்வாக மாற்றியமைப்பதற்கான தேவை எழுந்ததாலும், குறிப்பிடத்தக்க கேள்வி நிலவியதையடுத்து நாம் PickMe bike இனை அங்குரார்ப்பணம் செய்ய காரணமாக அமைந்தது. எமது சேவைகள் பயன்படுத்துநர்களின் வாழ்வை எளிதாக்குவதோடு மாத்திரமன்றி, மோட்டார் பைக் உரிமையாளர்களுக்கு மேலதிக வருமானத்தை உருவாக்கித்தந்து செயற்திறன் அதிகரிப்பு மற்றும் செலவுகளை குறைப்பதாக அமைந்துள்ளது என்றார்.   

 

Comments