இராணுவ வாகனம் விபத்து; பத்துப் படையினர் காயம் | தினகரன் வாரமஞ்சரி

இராணுவ வாகனம் விபத்து; பத்துப் படையினர் காயம்

நிந்தவூர் -அல்லிமூலை பகுதியில் வேகமாக வந்து கொண்டிருந்த இராணுவ வாகனம் வீதியின் குறுக்கே பாய்ந்த ஆடொன்றினை பாதுகாக்க முற்படுகையில், குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பத்து இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (6) 2 மணியளவில் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியிலிருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து நடந்த இடத்தில் இருந்து 15 அடி வழுக்கிய நிலையில் வயல் வெளியோரம் குடைசாய்ந்துள்ளது.  

இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 10 இராணுவ வீரர்களும் காயமடைந்த நிலையில் பல்வேறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களும் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் 2 இராணுவ வீரர்களும் மட்டக்களப்பில் ஒருவர், காரைதீவில் ஒருவர் என அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இராணுவ வீரர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

(புங்குடுதீவு குறூப் நிருபர்)  

Comments