இலங்கையில் Artificial Intelligence தேசிய கொள்கைத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் Artificial Intelligence தேசிய கொள்கைத் திட்டம்

இலங்கையில் Artificial Intelligence (AI) கொள்கைத் திட்டமொன்றை வடிவமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் சம்மேளனம் (SLASSCOM) அறிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக AI மற்றும் robotics ஆகியவற்றை எவ்வாறு தேசிய மட்டத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது பற்றிய பிரேரிப்பை இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து வெளியிட்டுள்ளது.  

இதன் அறிமுக நிகழ்வு கடந்த 26ஆம் திகதியன்று கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொலைத்தொடர்புகள் அமைச்சர் அஜித் பெரேரா மற்றும் துறைசார் நிபுணர்கள் பலரும் கலந்துகொண்டனர். AI கொள்கைக்கான கட்டமைப்பு SLASSCOM இன் தலைவர் ஜீவன் ஞானம் அவர்களால் வெளியிடப்பட்டது.  

பொது அமைப்புகள், MODSIT, ICTA மற்றும் UGC மற்றும் SLASSCOM ஆகியவற்றுடன் தனியார் துறையைச் சேர்ந்த FITIS மற்றும் SLANSHEI ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்ற இந்த கொள்கைக் கட்டமைப்பு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. விவாதிப்பதற்காகவும், கருத்துக்களை வழங்குவதற்காகவும் அடுத்த 6மாதங்களுக்கு இக்கட்டமைப்பு முன்வைக்கப்பட்டிருக்கும். இக்காலப் பகுதியில், SLASSCOM இனால் கொள்கை கட்டமைப்புகள் இயற்றப்படும். 

வெளிப்படைத்தன்மை, தமக்கு முன்னர் தேசம் மற்றும் தரவு அடிப்படையிலான பரிந்துரைப்புகள் போன்ற மூன்று பிரிவுகளின் பிரகாரமான பொறுப்புவாய்ந்த AI வடிவமைப்பின் மாற்றமுறும் வழிகாட்டல்களின் பிரகாரம், கல்வி, தொழில்நுட்பம், ஒழுக்கம், நியமப்படுத்தல் மற்றும் கொள்கை போன்றவற்றில் ஏழு பிரதான நிலை இலக்குகளை எய்துவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது:  

பொது மற்றும் தனியார் துறைகளில் விழிப்புணர்வு மற்றும் பின்பற்றலை அதிகரித்தல், AIக்கு முழுமையாக செயலாற்றக்கூடிய ஒழுங்கு விதிமுறையை அறிமுகம் செய்தல், AI தேசத்துக்காக மக்களையும் சமூகத்தையும் தயார்படுத்தல், சிறந்ததற்கான சாதனமாக AIஐ அறிமுகம் செய்தல், அடிப்படை மற்றும் பிரயோக ஆய்வை AI இல் ஊக்குவித்தல், போன்ற துறைகளில் AI இனால் செயலாற்றக்கூடியதாக இருக்கும் என இந்த கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments