கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ்ப்பாணத்தில் நடத்திய கருத்துக்களம் | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை யாழ்ப்பாணத்தில் நடத்திய கருத்துக்களம்

கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு இணைந்து நடாத்திய 'பங்குச்சந்தை, நகரங்கள் தோறும்' எனும் கருப்பொருளிலான 17வது முதலீட்டாளர் கருத்துக்களத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ சிற்றி ஹோட்டலில் அண்மையில் நடத்தியது.  

இந்நிகழ்வுக்கு பிராந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, 150க்கும் மேற்பட்ட முதலீட்டு ஆர்வலர்கள் பங்குபற்றினர். மூலதனச்சந்தை ஊடாக செல்வங்களைப் பெருக்குதல் எனும் கருப்பொருளுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கானது, கொழும்பு பங்குப்பரிவர்த்தனை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் இணைக் கல்விச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக அமைந்திருந்தது. 

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் பீடாதிபதி கலாநிதி தி. வேல்நம்பி, பேரினப்பொருளாதாரம் தொடர்பான விடயங்களை முதலீட்டாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். தொடர்ந்து, NDB பிணையங்கள் (தனியார்) கம்பனியின் ஆய்வுப்பகுதி முகாமையாளர் ரா. ரகுராம் துறைப் பெறுபேற்றுப் பகுப்பாய்வு மற்றும் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழவின் மூலதனக்கல்விப் பிரிவின் உதவி இயக்குனர் சுனேத் பெரேரா மற்றும் பரிவர்த்தனையின் யாழ். கிளை முகாமையாளர் மு. திலீபன் ஆகியோர் இணைந்து குழுக்கலந்துரையாடல்களில் பங்குபற்றி முதலீட்டாளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தனர்.  

மேலும் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்கள் இங்கு வருகைதந்த முதலீட்டு ஆலோசகர்களுடன் நேரடியாக தொடர்பு களை ஏற்படுத்தி, கலந்துரையாடி சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளவும் சந்தை வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.    

 

Comments