சியெட் களனி இன் சிறப்பு மிக்க டிரக், பஸ், ரேடியல் டயர்கள் சந்தையில் | தினகரன் வாரமஞ்சரி

சியெட் களனி இன் சிறப்பு மிக்க டிரக், பஸ், ரேடியல் டயர்கள் சந்தையில்

இலங்கை வீதிகளில் வலம் வரும் பஸ்கள் டிரக்குகள் மற்றும் பிரைம் மூவர் ரக வாகனங்களுக்கென்றே உள்ளூர் நிலைமைகளோடு முற்று முழுதாக ஒத்துப் போகக் கூடிய வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கனரக அதி உயர் செயற்பாடு மிக்க ரேடியல் டயர்கள் சியெட் நிறுவனத்தால் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் டயர் தேவையில் சுமார் அரைவாசியை உற்பத்தி செய்யும் சியெட் களனி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திருப்பு முனை உற்பத்தியாக அமைந்துள்ள இந்த உற்பத்திகள் வர்த்தக ரீதியாக அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டன. 

3பில்லியன் ரூபா முதலீட்டுத் திட்டத்தின் ஒரு கட்டமாக 2018ஜனவரியில் இத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. டிரக் - பஸ் ரேடியல் அல்லது TBR என சுறுக்கமாக அழைக்கப்படும் இந்த முதலாவது உள்நாட்டு உற்பத்தி இலங்கையிலும் இந்தியாவிலும் பல மாதங்களாக தீவிர வீதிப் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளது. களனியில் உள்ள சியெட் களனி உற்பத்தி வளாகத்தில் அமைந்துள்ள அதி நவீன உற்பத்தித் தொழிற்சாலையில் அதி நவீன இத்தாலிய இயந்திரங்களால் வடிவமைக்ப்பட்ட பின்னரே தீவிர வீதிப் பரிசோதனைக்குட்டது. 

ஐரோப்பாவில் இருந்து தருவிக்கப்பட்ட மிகச்சிறந்த அதி நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தி பூர்த்தி செய்யப்பட்டுள்ள இந்த டயர்கள் இலங்கையின் வர்த்தகப் பிரிவின் துரித மாற்றத்துக்கு ஈடுகொடுக்கக் கூடியவை. ஏற்கனவே ரேடியல் டயர் வகைகளைப் பாவிப்பவர்களுக்கு இந்த உற்பத்தி செலவு ரீதியாகவும் ஈடுகொடுக்கக் கூடியது.

உள்ளூர் பஸ் மற்றும் டிரக் டயர் சந்தையில் சியெட் உற்பத்திகள் ஏற்கனவே 65 வீத பங்கை கொண்டுள்ளன. அவற்றுள் 55 வீதமானவை இன்னமும் Bias-ply டயர் வர்க்கத்தையே பாவிக்கின்றன.

Comments