உன்னைப் பார்த்த பின்னே...! | தினகரன் வாரமஞ்சரி

உன்னைப் பார்த்த பின்னே...!

என்னைப் பற்றி   
அறியாமல் இருந்த   
நான் உன்னை   
பார்த்த பின்னே நான்   
என்னை அறிந்து   
கொண்டேன்   
இப்போது சேவல் கூவும்   
சத்தம் கேளாமலும்   
அலாம் வைக்காலும்   
வைகறையில் விழித்தெழுந்து   
பனி பொழியும்   
சில்லென்ற அருவியில்   
நீராடி அடர்த்தியான   
என் கார் கூந்தலை   
தென்றல் காற்றில்   
அலையவிட்டு அழகு   
பார்க்கிறேன்   
முற்றத்தில் எழிலாய்   
மலர்ந்து மணம்   
அழகிய மல்லிகை   
ரோஜா மலர்களைப்   
பறித்து முகர்ந்து   
பார்த்து மகிழ்கிறேன்   
காலை வந்தனம்   
சொல்லும் கதிரவனின்   
கதிர் ஒளிபட்டு   
அழகு கோலம்   
போடும் தரணியின்   
அழகை பார்த்து பார்த்து   
பரவசம் அடைகிறேன்   
வெண் முத்துப் போல்   
பனித்துளி படர்ந்த   
பசும் புல்வெளியில்   
கால்கள் நனைய   
நனைய நடந்து   
பார்க்கிறேன்   
இயற்கை அன்னையின்   
பசுமையான தாவர   
இலைகளை தடவி   
பார்த்து வியந்து   
போகிறேன்   
ஆடைகளை அடிக்கடி   
மாற்றி மாற்றி   
அழகு பார்க்கிறேன்   
கண்ணாடி முன்னே   
நின்று உன்னிடம்   
கதைக்க ஒத்திகை   
பார்க்கிறேன்   
மருந்து சீட்டு கிறுக்கலாக   
இருந்த என் கையெழுத்து   
இன்று முத்து முத்தாய்.   
மாறியது எண்ணி   
நானே வியந்து   
போகிறேன்   
புத்தகத்தையே   
தொடாத நான்   
இன்று புத்தகம்   
வாசிக்க நூலகம்   
செல்கிறேன்   
தப்புத் தப்பாய்   
தமிழ் எழுதி   
தமிழ் வாத்தியாரிடம்   
அடி வாங்கிய நான்   
இன்று காதல்   
கவிதை எழுதுகிறேன்   
உன்னைப் பார்த்த   
பின்னே சின்னச்   
சின்ன விசயங்களையும்   
சிறப்பாய் செய்கிறேன்   
விஞ்ஞானத்தின் வேதியலால்   
விவேகியாய் என்னை   
மாற்றி விட்டாய்   
என் அன்பே   
உன்னைப் பார்த்த   
பின்னே நான்   
என்னை அறிந்து   
கொண்டேன்!   
 
என்.கே. வேணி,   
பலாங்கொடை  

Comments