அப்ப, அப்புறம், பேந்து! | தினகரன் வாரமஞ்சரி

அப்ப, அப்புறம், பேந்து!

இதென்னடா இது? ரொம்ப, நிரம்ப, கனக்க என்ற மாதிரி இருக்கிறதெண்டு யோசிப்பீங்கள். அப்பிடியே வைச்சுக்கொள்ளுங்களன். மூண்டும் ஒண்டுதான். ஆனால், சொல்லப்படும் இடங்கள் வேறு வேறு. இதில் ஒன்றைத் தவிர, மற்ற ரெண்டை எல்லாரும் சொல்வாங்க.

கண்டி, அக்குறணையிலை ஆறு பேச்சு வழக்கு இருந்ததாம். ஆனால், இப்ப எல்லாம் தேய்ஞ்சு, ஒண்டுக்குள்ள வந்திட்டது என்று ஒரு நண்பர் வருத்தப்பட்டார். ஏனெண்டு கேட்டன். இல்லை, வேற்றுமையில் ஒற்றுமை இருக்கத்தான் வேண்டும். ஆனால், இப்போது அங்கு வேற்றுமையும் இல்லை; ஒற்றுமையும் இல்லை, என்றார்.

ஆங்கிலத்தில் அமெரிக்கா, பிரிட்டன் என்று இருக்கிறது. என்றாலும் தமிழ் என்றால், தமிழ்தான். உலகம் முழுவதும் ஒரே தமிழ்தான்.

பிரிட்டிஷ் ஆங்கிலத்திலும் அமெரிக்க ஆங்கிலத்திலும் எழுத்திலும் வேறுபாடு உண்டு; பேச்சிலும் வேறுபாடு உண்டு. உச்சரிப்பிலும் வேறுபாடு இருக்கிறது. தமிழைப் பொறுத்தவரை தராதரத் தமிழ் என்பது ஒன்றே ஒன்றுதான். இது அநேகருக்குத் தெரியாது.

கடந்த வாரம் அமெரிக்காவில் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தது. அதன்போது ஊடகங்களில் தமிழைப் பற்றிப் பல்வேறு கட்டுரைகள், செய்திகள் வெளியாகியிருந்தன. அது வரவேற்கத்தக்கது. இலங்கையர்களைப் பொறுத்தவரை, தமிழின் பிறப்பிடம் இந்தியா என்றாலும், அந்தத் தமிழ் சரியில்லை. நாங்கள்தான் சரியாகத் தமிழைக் கையாள்கிறோம் எண்டு சொல்றாங்க. ஆனால், இலங்கையில் ஆயிரத்தெட்டுப் பிளவுகள். யாழ்ப்பாணத்தை எடுத்துக்ெகாண்டாலும் பல பிரிவுகள். ஊருக்கு ஊர் வித்தியாசமான பேச்சு வழக்கு. ஆனால், பொதுவாக யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு என்று ஒன்றுதான் சொல்லப்படுகிறது.

யாழ் தமிழ்தான் சரியான தமிழ் என்று சொன்னால், தென் பகுதியிலும் மலைப்பகுதியிலும் ஒத்துக்ெகாள்ளமாட்டார்கள். அதென்ன பேந்து? அப்பிடிப் பேசுவதை எப்பிடி சரியான தமிழ் என்று சொல்வீர்கள்? என்று கேட்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களைப் பொறுத்தவரை, அவர்களைத் தவிர வேறு எவருக்கும் தமிழைச் சரியாகப் பேசவும் தெரியாது எழுதவும் தெரியாது என்பார்கள். ஆனால், அந்த நிலைமைக்குக் காரணம் அவர்கள்தான் என்கிறார் நண்பர்.

அவருக்கு இன்னமும் ஒன்று புரியவில்லை. பேச்சுத் தமிழ் என்பது நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் வேறுபடத்தான் செய்யும். அதைத் தவிர்க்கவியலாது. தமிழகத்திலும் மாவட்டத்திற்கு மாவட்டம் வித்தியாசமாகப் பேசுவார்கள். ஆனால், பொதுவான ஓர் இடத்தில் தராதரத் தமிழைத்தான் பேசுகிறார்கள். அதற்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை எடுத்துக்ெகாள்ளலாம். எல்லாக் கதைகளும் படங்களும் உலகத்தில் உள்ள எல்லாத் தமிழர்களுக்கும் புரியும்.

அதேபோன்று பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களின் சொந்த ஊர் பேச்சு வழக்ைகப் பயன்படுத்துவதில்லை. அவர்கள், தராதரத் தமிழையே பேசுகிறார்கள். இலங்கையில், அப்படி கிடையாது. கற்றவரும் மற்றவரும் தங்களுக்ெகன்று பழகிப்போன மொழியை மறக்கமாட்டார்கள். கேட்டால், தனித்துவம் தனியினம் என்பார்கள். இன்னும் சிலர் கொச்சையாகவும் பிழையாகவும் பேசுவது தங்களின் இனத்துவ அடையாளம் என்று இன்னமும் விதண்டாவாதம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அக்குறணையில் பொதுவான தராதர மொழி உருவாகிவிட்டதை வரவேற்கிறோம் என்கிறார்கள் கல்வி கற்றவர்கள். எல்லாமே மாறி வருகிறது. தமிழும் அப்படித்தான். நூற்றாண்டு காலத்திற்குப் பின்னர் நன்றாகவே மாறிவிட்டது. ஆனால், இன்னமும் பலர், எல்லா இடத்திலும் வல்லினம் மிகுத்து எழுதுகிறார்கள். வந்துக்ெகாண்டிருந்தார், சென்றுக்ெகாண்டிருந்தார் என்று எழுதுகிறார்கள். எழுதினாலும் பரவாயில்லை, பேசுவதும் கொச்சை;பிழை! இதில் கொடுமை என்னவென்றால், சொந்தப் பிரதேச வழக்கு என்று ஆசிரியர்மாரே வரிந்துகட்டுவது.

யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் பேச்சுவழக்கு கொச்சையாக இருந்தாலும், உச்சரிப்பைத் தவறவிடமாட்டார்கள். தமிழ் தமிழாய் இருக்கும். இது மலைப்பகுதியிலும் கொழும்பிலும் உள்ளவர்களுக்குப் புரியாது. நாலைந்து பட்டத்தை வாங்கி வைத்திருப்பவருக்கும் தமிழைக் கையாளத் தெரியாது! இதுதான் உண்மை.

சொந்த மொழியைச் சரியாகப் பேசத் தெரியாதவன் வேறு எந்த மொழியையும் படித்துப் பிரயோசனம் இல்லை என்கிறார் பேராசிரியர் சந்திரசேகரன். தாய்மொழியைச் சரியாகக் கற்றவனுக்குத்தான் பிற மொழியையும் சரியாகக் கற்றுக்ெகாள்ள முடியும் என்கிறார் பேராசிரியர்.

இந்த விடயத்தைத் தொடுவதற்குக் காரணம் அக்குறணைதான். அங்கு அப்படியென்றால், யாழ்ப்பாணத்திலும் சில இடங்களில் இப்போது இந்திய பேச்சு வழக்கு பேசப்படுவதாகச் சொல்கிறார் ஒரு நண்பர். யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியும் இந்திய பேச்சு வழக்ைகயே பயன்படுத்துகின்றது. ஆனால், தமிழ் தமிழாக இருக்கும். பேச்சு வழக்குதான் என்றாலும் உச்சரிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஆகவே, இதில் தவறில்லை என்கிறார்கள்.

இலங்கையில் அதுவும் தமிழர்கள் ஒரு தராதரத் தமிழுக்கு மாற வேண்டிய தருணம் பிறந்துள்ளது என்கிறார் நண்பர் உறுதியாக. ஏனென்றால், அப்ப, அப்புறம், பேந்து என்பது எல்லாம் ஒரே அர்த்தத்தைக் கொடுப்பதைப்போல், தமிழர்களின் அரசியலும் ஒரே அணிக்குள் வந்திருக்கிறது. தமிழால் மட்டுமே ஒன்றிணைய முடியும். உலகம் கிராமமாகி வரும் நிலையில், இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்ெகாண்டிருக்க முடியாது என்பது நண்பரின் கருத்து. மொழியின் மாற்றத்தைக் கற்றுக்ெகாண்டு புதிய பாதையில பயணிக்க வேண்டும்.

பேச்சு வழக்கை வீட்டில் வைத்துக்ெகாண்டு கல்வி கற்றவர்கள் என்றால், ஒரு தராதரத்திற்கு வரவேண்டுமா, இல்லையா? என்பதை நீங்களே சிந்தித்து முடிவெடுத்துக்ெகாள்ளுங்கள்! அப்ப, அப்புறம், பேந்து? என்று கேட்காமல்.

Comments