அவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்! | தினகரன் வாரமஞ்சரி

அவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில்!

அவுஸ்திரேலியாவில் முதலிடம் வகிக்கும் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கொழும்பில் புதிய சர்வதேச உயர்கல்வி கல்லூரியான யுடிஎஸ் இன்ஸர்ச்ஐ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பனம் செய்து வைத்தார். 

கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர், டேவிட் ஹோலி, சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யுடிஎஸ்) துணை வேந்தர் மற்றும் துணைத் தலைவர் (சர்வதேச பிரிவு) ஐயன் வாட், யுடிஎஸ் இன்ஸர்ச் இன் நிர்வாக இயக்குனர் அலெக்ஸ் மர்பி மற்றும் கொழும்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பிரமுகர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இதன் மூலம் சர்வதேச அறிவு மற்றும் தொழில் வெற்றிக்குத் தேவையான திறன்கள் மற்றும் கல்வியையும் அதன் அண்மைக்கால முன்னேற்றங்களையும் யுடிஎஸ் சிட்னியில் இருந்து உயர்கல்வி மூலம் இலங்கை மாணவர்கள் பயனடையக்கூடியதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கான ஆரம்ப முதலீடு 2மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும், இது அவுஸ்திரேலியாவின் உறுதிப்பாட்டையும் இலங்கையுடனான நெருக்கமான உறவையும் உறுதிப்படுத்துகிறது. 

இலங்கையில் யுடிஎஸ் பட்டப்படிப்பு (டிப்ளோமா) திட்டங்களை தொடங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது அவுஸ்திரேலியாவின் மிகவும் புதுமையான மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பல்கலைக்கழகங்களுக்கான ஒரு பாதையை இலங்கை மாணவர்களுக்கு திறந்து கொடுப்பதுடன் அவுஸ்திரேலியா சிட்னியில் தங்கள் படிப்பை முடிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும் என பிரதமர் ரனில் தெரிவித்தார். 

அவுஸ்திரேலியா இலங்கை மாணவர்களை வரவேற்கின்ற ஒரு இடமாகும், இலங்கை பாரம்பரியத்தைச் சேர்ந்த 170,000க்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே அவுஸ்திரேலியா சமூகத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், யுனெஸ்கோவின் கூற்றுப்படி, இலங்கையிலிருந்து சர்வதேச அளவில் இடம்பெயரும் மாணவர்களுக்கான சிறந்த இடங்களில் அவுஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் படிக்கும் 19,000இலங்கையர்களில் கிட்டத்தட்ட 40%பேர் அவுஸ்திரேலியாவில் படிக்கத் தேர்வு செய்கிறார்கள். 

 

Comments