இல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

இல்லத்தரசிகளின் விருப்பத்தெரிவான N-joy தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் மீள் - அறிமுகம்

N-joy, தேங்காய் எண்ணெய் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரே தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் தயாரிப்பாக திகழும் N-joy, முழுமையாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. 'அவளின் தெரிவு' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மீள்அறிமுக நிகழ்வில், வர்த்தகநாம தூதுவரான புகழ்பெற்ற நடிகையான பூஜா உமாசங்கர் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சுரேன் பெர்னான்டோ, சுமார் 150 வருடகாலம் பழைமை வாய்ந்த N-joy, தேங்காய் எண்ணெய் சந்தையில் இருந்த போதிலும் அதன் தயாரிப்பு முதல் பொதியிடல் வரையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த நாம் விரும்பினோம். தேங்காய் அடிப்படையிலான தயாரிப்புகளில் எமது ஈடுபாடு மற்றும் நிபுணத்துவத்தினூடாக நுகர்வோருக்கு உயர் தரமான தயாரிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கான முழு ஆற்றலையும் நாம் கொண்டுள்ளோம் என்றார்.  ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் தர உறுதிப்படுத்தல் முகாமையாளர் சாலிய சில்வா, எமது தயாரிப்புகளை நவீன வசதிகளைக் கொண்ட உற்பத்திப் பகுதியில், உயர்தர நிர்ணயங்களுக்கமையவும், தயாரிப்பு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எவ்விதமான இரசாயன பதார்த்தங்களின் சேர்மானமுமின்றி உற்பத்தி செய்யப்படுகிறது என்றார். வெள்ளை தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் ஆதம்ஜி லுக்மன்ஜி அன்ட் சன்ஸ் நிறுவனம் முன்னோடியாக அமைந்துள்ளது. எவ்விதமான இரசாயன பதார்த்தங்களும் சேர்க்கப்படாத உயர்தரம் வாய்ந்த கொப்பரா தயாரிப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் விநியோக தொடருடன் நெருக்கமாக செயலாற்றி வருவத னூடாக இதை பேண முடிகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.    

Comments