கதிர்காமம், உகந்தை தீர்த்தோற்சவ தினங்கள் அறிவிப்பு | தினகரன் வாரமஞ்சரி

கதிர்காமம், உகந்தை தீர்த்தோற்சவ தினங்கள் அறிவிப்பு

கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல்விழாவின் தீர்த்தோற்சவம் எதிர்வரும்17ஆம் திகதி புதன்கிழமை மாணிக்க கங்கையில் நடைபெறுமென ஆலய பஸ்நாயக்க நிலமே தில்ரூபன் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல் விழா தீர்த்தோற்சவம் எதிர்வரும்18ஆம் திகதி வியாழக்கிழமை சமுத்திரத்தில் நடைபெறுமென ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தெரிவித்துள்ளார்.

இவ்வாலயங்களின் தீர்த்தோற்சவ திகதிகள் தொடர்பில் அடியார்களுக்குச் சரியான தெளிவின்மை நிலவுவதாக கூறப்பட்டதையடுத்து ஆலயங்களின் தலைவர்கள் விளக்கமளித்துள்ளனர். இவ்விரு ஆலயங்களினதும் கொடியேற்றம் ஒரே திகதியில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்    

Comments