அமலா பாலின் படம் ரசிகர்கள் ஏமாற்றம் | தினகரன் வாரமஞ்சரி

அமலா பாலின் படம் ரசிகர்கள் ஏமாற்றம்

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடிப்பில் உருவாகி உள்ள ஆடை படம் வௌியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆடை. இந்த படத்தில் சுமார் ஒரு மணி நேரம் அமலாபால் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். படத்தில் அமலா பாலுடன் ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆடை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின. 

டீசரில் இடம்பெற்ற நிர்வாண காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பற்றி மேடையில் பேசும்போது அமலாபால் எனக்கு 15கணவர்கள் என்று கூறியதும் சர்ச்சையானது. இப்படி பல சர்ச்சைகளை சந்தித்ததால் படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்று ஆடை படம் ரிலீசாக இருந்தது. ஆனால் ஆடை படம் திட்டமிட்டபடி இன்று ரிலீசாக வில்லை. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினை காரணமாக தியேட்டர்களுக்கு சென்று சேர வேண்டிய கேடிஎம்கள் சென்று சேரவில்லை என்கிறார்கள். 

எனவே படத்தை காண ஆவலுடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டதற்கு ’பைனான்ஸ் பிரச்சினையால் ரிலீஸ் தள்ளிப்போகிறது. விரைவில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப் பட்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்கள்   

Comments