தெரிந்துகொள்வோம்...! | தினகரன் வாரமஞ்சரி

தெரிந்துகொள்வோம்...!

நோபல் பரிசு 

பரிசு கிடைக்கிறது என்றால் அதனால் மகிழ்ச்சியடையாதவரோ, அதனைப் பாராட்டாத-வரோ இவ்வுலகில் யாருமே இருக்க முடியாது. பாடசாலைகள், கல்லூரிகள், மாவட்ட மட்டத்தில், மாகாண மட்டத்தில் பரி-சு வாங்குவோரைப் பார்த்திருக்கலாம். நாடுகள் என்று எடுத்துக் கொண்டால், உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் பல வகையான பரிசுகள் பல்வகைத் துறைகளின் திறமைகளுக்காக வழங்கப்படுகின்றன. 

இப்படிப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டாலும், நோபல் பரிசுக்கு இணையாக வேறு எந்தப் பரிசும் இல்லை. நோபல் பரிசு பெறும் பரிசாளரை உலகமே மதித்துப் போற்றுகிறது. இந்த நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார்? அவரின் தனித்தன்மைகள் என்ன? நோபல் என்ற பெயர்வரக் காரணம் என்ன என்பன-வற்றைப்பற்றித் தெரிந்து கொள்வோம். 

நோபல் பரிசை நிறுவியவர் அறிவியல் அறிஞர் ஆல்ஃப்ரெட் நோபல் என்பவர் ஆவார். இவர் ஸ்வீடன் நாட்டில் பிறந்தவர். வேதியியல் கண்டு-பிடிப்புகளுக்காகவும் அவற்றின் அபிவிருத்திக்-காகவும் தன் வாழ்க்கையில் 50ஆண்டுகள் உழைத்தவர். முதன் முதலில் வெடிமருந்தைக் கண்டு பிடித்தார். இது, நோபலின் உடன்பிறந்த சகோதரனையே கொன்றது. இதனால், மேலும் சற்று உயர்ந்த ரக வெடி-மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, டைனமைட்டைக் கண்டுபிடித்தார். வெற்றியடைந்து பிரபலமானார். பெரும் பொருள் ஈட்டினார். 

ரஷ்யாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதிலும் அதிகமாகப் பணம் சம்பாதித்தார். திருமணம் செய்து கொள்ளாதவர். ஸ்வீடிஷ், ஆங்கிலம், ரஷ்யன், பிரெஞ்ச், ஜெர்மனி ஆகிய ஐந்து மொழிகளில் புலமை பெற்றிருந்தார். 

உலகில் சமாதானம் தழைத்தோங்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்தவர். நாடுகள் தங்கள் பிரச்சினைகளை, பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்; உலக நாடுகள் அளவில் ஒரு சமாதானப்படையை வைத்திருக்க வேண்டும் என விரும்பியவர். அவர் வாழ்ந்த காலத்தில் ஐ.நா.சபை கிடையாது. அன்றே ஐ.நா.சபை போன்றதொரு அமைப்பு தேவை என்று கூறியவர். 

அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்த பணத்தை, அவர் பெயரிலேயே நோபல் அறக்கட்டளையை உருவாக்கினார். 1896இல் அவர் இயற்கை எய்தியபோது அவர் சம்பாதித்திருந்த சொத்து 33மில்லியன் சுவிஸ் பணமாகும். அமெரிக்க ​ெடாலர் மதிப்பில் 6மில்லியன் டொலர்கள். சொத்தின் மதிப்பு இன்று 1.7பில்லியன் சுவிஸ் பணமாகும். அதாவது, 261மில்லியன் டொலர்கள். இந்திய ரூபாயில் சொல்வதானால் தோராயமாக ரூ 1,096கோடி. இந்த வைப்பு நிதியிலிருந்து வரும் வட்டித் தொகையை, ஆண்டுதோறும் இலக்கியம், வேதியியல், இயற்பியல், மருத்துவம் அல்லது மருந்து, சமாதானம், பொருளாதாரம் ஆகிய 6துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்து, நோபல் மரணமடைந்த டிசம்பர் 10இல், 1901முதல் வழங்கி வருகிறது இந்த அறக்கட்டளைக் குழு. 

1987வரை 3லட்சம் டொலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 99லட்சம் ரூபாய் கொடுக்கப்-பட்டு வந்தது. 1992இல் இருந்து 12மில்லியன் டொலர், அதாவது 3கோடியே 60லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாகக் கொடுக்கப்பட்டது. இவ்வளவு மதிப்பு வாய்ந்த பரி-சுத் தொகை வேறு எந்த நாட்டிலும் இல்லை. எனவே, உலகிலேயே தலைசிறந்த பரிசாக - பெருமைக்குரிய பரிசாகப் போற்றப்படும் தனிச்சிறப்பு நோபல் பரிசுக்கு மட்டுமே உள்ளது! 

பெரியசாமி திலானுஷா, 
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, 
கொழும்பு 04.

Comments