அப்துல்லா மஃறூப் எம்.பியை ஒலுவிலில் தாக்க முயற்சி | தினகரன் வாரமஞ்சரி

அப்துல்லா மஃறூப் எம்.பியை ஒலுவிலில் தாக்க முயற்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் துறைமுக அதிகாரசபையின் ஓய்வு விடுதியில் நேற்று சனிக்கிழமை (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஃறூப் எம்பி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மு.கா பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பாக கருத்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டவர்களினால் இத் திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவுமின்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு கடற்படையினர், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நமது நிருபர்

Comments