கல்முனை வடக்கில் கணக்காளர் நாளை கடமையேற்பு | தினகரன் வாரமஞ்சரி

கல்முனை வடக்கில் கணக்காளர் நாளை கடமையேற்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாமென கல்முனை மாநகரசபையின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் க. சிவலிங்கம் தெரிவித்தார்.  

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு அதிகாரம் கொண்ட கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரும், அவ்வாறு எவரும் நியமிக்கப்படவில்லை என முஸ்லிம் தரப்பினரும் மக்களைக் குழப்பி வரும் நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் சிவலிங்கம்,  

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக நிதி அதிகாரம் கொண்ட கணக்காளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுள்ளன. கணக்காளர் நாளை திங்கட்கிழமை கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார்.  

இந் நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஆகியோர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். 

தமிழ் மக்கள் எப்போதும் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்றார்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்   

Comments