புனரமைக்கப்பட்ட கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று திறப்பு | தினகரன் வாரமஞ்சரி

புனரமைக்கப்பட்ட கட்டுவாபிட்டி தேவாலயம் இன்று திறப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று பொதுமக்கள் பிரார்த்தனைக்காகத் திறந்துவைக்கப்படுகின்றது. 

குண்டுத்தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் சரியாக மூன்றுமாதங்கள் கடந்த நிலையில் இலங்கை இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் இன்று காலை 8மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன.  இந் நிகழ்வைத் தொடர்ந்து கட்டுப்வாபிட்டி கத்தோலிக்க அறநெறிப்பாடசாலைக்கான கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டவுள்ளது. அத்துடன் கட்டுவாப்பிட்டி பகுதியில் வீடுகள் அற்றவர்கள் குறித்து கவனம் செலுத்தி அவர்களுக்கான திட்டமொன்றை அறிவிக்கப்படவுமுள்ளது.

இப்பகுதியில் குண்டுத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நேற்று (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Comments