60 வருட பூர்த்தியை கொண்டாடும் அட்லஸ் நிறுவனம் | தினகரன் வாரமஞ்சரி

60 வருட பூர்த்தியை கொண்டாடும் அட்லஸ் நிறுவனம்

இலங்கையின் உரிமையாண்மையில், இயங்கும் அட்லஸ் அக்ஸிலியா நிறுவனம் தனது 60வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில், சிறுவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் மற்றும் புதிய தயாரிப்புகளின் அறிமுகம் போன்றவற்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது. உள்நாட்டு பெறுமதிகள் மற்றும் ஒற்றுமை தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேர்த்தியான மனநிலையை உருவாக்குவதற்கும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.  

அட்லஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அசித சமரவீர ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், “60வருட காலமாக, எமது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்விக்கு உதவுவதற்கு அட்லஸ் கடுமையாக உழைத்த வண்ணமுள்ளது. ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் முதல் தரம் 5ம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகள் வரை நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த சிறார்களின் வளர்ச்சிக்கு உதவ நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 16வருட காலமாக ரிதிகம, ரிதி விஹாரையுடன் இணைந்து வருடாந்தம் ஐந்தாயிரம் சிறுவர்களுக்கு காகிதாதிகளை விநியோகிக்கும் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை நாம் பின்பற்றி வருவதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.  

100%இலங்கையின் வர்த்தக நாமம் எனும் வகையில், நிறுவப்பட்டது முதல் பல சவால்களை அட்லஸ் எதிர்நோக்கியிருந்தது.

இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த காகிதாதிகள் மற்றும் போலித் தயாரிப்புகளுக்கு எதிராக போராடியிருந்தது. தனது தயாரிப்புகளில் தொடர்ச்சியாக புத்தாக்கத்தை அறிமுகம் செய்ததுடன், தரம் மற்றும் சகாயத்தன்மை ஆகியவற்றின் கவனம் செலுத்திய நிலையில் இந்த சவால்களுக்கு நிறுவனம் முகங்கொடுத்திருந்தது.  

சமரவீர குறிப்பிடுகையில், அட்லஸ் மிக அண்மையில் எதிர்நோக்கியுள்ள தடையாக வெறுப்பூட்டும் பிரச்சார செயற்பாடு அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களினுௗடாக பரப்பப்படுவதுடன், போலி செய்திகள், போலி கணக்குகள் ஊடாக இந்த வெறுப்புணர்வூட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக கூறினார்..  

வர்த்தக நாமத்துக்கு எதிராக வெறுப்புணர்வூட்டும் உரைகள் மற்றும் போலி செய்திகள் அடங்கிய 400க்கும் அதிகமான பதிவுகள் Facebook இலும், ஏனைய சமூக ஊடக கட்டமைப்புகளிலும் காணப்பட்டதுடன், அவை தொடர்பில் அறிவிக்கப்பட்டு, அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

Comments