சகவாழ்வு காண்போம்! | தினகரன் வாரமஞ்சரி

சகவாழ்வு காண்போம்!

நம் வாழ்வுதான் வளமாகணும்   
அதற்கான பொழுதுகள் உருவாகணும்   
நீ நான் பிரிவுகள் எதற்குத்தான்   
நாம் என்றால் அது நமக்குத்தான்   
ஒன்றாகிப் பார்ப்போம்   
சகவாழ்வைக் காப்போம்   
விழிகளே வாருங்கள்   
சந்தோஷத்தின் துளிகளைக் காணலாம்   
நாம் நம்மை ஆளலாம்   
ஒருபாதை வழியில்   
திட்டங்கள் வகுப்போம்   
மறுபாதை உண்டா?   
சிந்தனை செய்வோம்   
இருளினை துரத்திடும் நிலவுதான்   
விரல்களே இணைந்திட்டால் நலவுதான்   
நிறங்களில் பலவகை இருப்பினும்   
விரும்பினோம் மலர்களை   
அதுபோல் மாறினால்   
வாழ்க்கை மகிழ்வாகுமே!   
 
கவி ஏ.எம். கஸ்புள்ளா   
சின்னக்கிண்ணியா 

Comments