சல்மான்கான் மீது தீபிகா படுகோன் பாய்ச்சல் | தினகரன் வாரமஞ்சரி

சல்மான்கான் மீது தீபிகா படுகோன் பாய்ச்சல்

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவதற்கு போராடி கொண்டிருந்த போது தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார். 

இந்தி முன்னணி நடிகர் சல்மான் கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்பே தனக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதை கேட்ட தீபிகா அவரை விளாசி உள்ளார். அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது:- 

‘என் மனஅழுத்த அனுபவம் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் போராட்டம் என்பேன். ஒவ்வொரு நொடியுமே போராட்டம் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது எப்போதுமே அசதியாக இருக்கும். 

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு கிடைக்க வில்லை என்று நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாரும் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. பணம், புகழ், குடும்பம் என்று அனைத்தும் இருந்தால் மன அழுத்தம் ஏன் வரப்போகிறது என்ற நினைப்பு உள்ளது. 

மன அழுத்தம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. ஒரு குறிப்பிட்டவர்களுக்கு தான் மன அழுத்தம் ஏற்படும் என்று நினைப்பது தவறு. 

மன அழுத்தம் பற்றி வெளியே தெரிவிக்க பலர் பயப்படுகிறார்கள். இதில் பயப்பட எதுவுமே இல்லை. உரிய சிகிச்சை பெறுவது அவசியம்’. 

இவ்வாறு தீபிகா கூறியுள்ளார். 

மன அழுத்தம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த லிவ் லவ் லாப் பவுண்டே‌ஷனை தீபிகா கடந்த 2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி தொடங்கினார். தீபிகா மனம் திறந்து பேசிய பிறகு பல நடிகைகள் மன அழுத்தம் குறித்து பேச தொடங்கி உள்ளனர்.  

Comments