வாழ்வின் நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வின் நிறைவு

விருப்பம் இல்லாத மனிதனே இல்லை என சொல்லலாம். ஆனால், விரும்பும் பொருள் கிடைக்கும்போது மனம் மகிழ்வதைக் காட்டிலும் அப்பொருள் கிடைக்காதபோது ஏற்படும் துன்பமே மிக அதிகமாகும். மேலும் கிடைக்காத பொருளின் மீது வெறுப்பும் ஏற்படுகிறது. விருப்பு வெறுப்பு அற்ற நிலையே சிறந்தது. விருப்பத்தை ஒழிக்க நினைப்பது தவறு. ஏனெனில், விருப்பம் தேவையின் நிமித்தம் எழுவது. நாம் உயிரோடு இருப்பதற்கு சான்றே நம்மில் எழும் விருப்பமே ஆகும்.  

எனவே, விருப்பத்திற்கு பதிலாக வெறுப்பை ஒழிப்பதே சிறந்தது. வெறுப்பு நம் அறிவின் குறைவினால் வருவது. விருப்பத்தை ஒழித்துவிட்டால் வாழ்வில் இன்பமே இருக்காது.  

எனவே, விருப்பத்தை செயலாற்றினால் ஏற்படும் விளைவை யூகித்து அறிந்து நலமளிக்கும் விருப்பத்தை செயல்படுத்தினால், அதுவே நம் வாழ்வை வளமாக்கும். எனவே, ஆசை எனப்படும் விருப்பத்தை தவிர்த்து, அத்தியாவசியமான, நிறைவேறக்கூடிய ஆசைகளை மட்டும் சீரமைத்து செயல்படுத்தி, இன்பம் துய்ப்பதோடு காரணமற்ற வெறுப்பை ஒழித்து வாழ்வில் நிறைவு காண்போம்..! 

சோ. வினோஜ்குமார், 
தொழினுட்ப பீடம், 
யாழ். பல்கலைக்கழகம், 
கிளிநொச்சி.  

Comments