பாதுகாப்பு செயலாளர் நேற்று மட்டு விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

பாதுகாப்பு செயலாளர் நேற்று மட்டு விஜயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டகொட தெரிவித்தார். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நேற்று சனிக்கிழமை (10) பாதுகாப்பு செயலாளர் சாந்த கொட்டகோட, இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கா, கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உட்பட இராணுவ அதிகாரிகளும் விஜயம் மேற்கொண்டிருந்தனர். இங்கு இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுவரும் சியோன் தேவாலய கட்டடத்தைப் பார்வையிட்டு இது தொடர்பாக ஆராய்ந்தனர்.  

இதன்போது ஊடகவியலாளுர்களுக்குக் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற இந்த சியோன் தேவாலயத்தை இராணுவத்தினர் புனரமைத்து வருகின்றனர். 

இருந்தபோதும் இதனை இன்று பார்வையிட்டுள்ளதுடன் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

Comments