பூக்களையே பி(ட்)டுங்குகிறவன் | தினகரன் வாரமஞ்சரி

பூக்களையே பி(ட்)டுங்குகிறவன்

பூத்துச் சிரிக்கும்  
பூக்களை  
அவன் பிடுங்கி  
போடாமல் – அவை  
இருக்கவே வேண்டுமென  
கடவுளுக்கு  
மனதால்- பூசார்த்திப்  
பிரார்த்தித்தேன்  
கொத்துக் கொத்தாய்  
தொங்கும் பூக்களை  
காலையில் அவன்  
பறித்திட்டால் போச்சே  
என்றும் இன்றிரவும்  
தூக்கமே இல்லையே  
எனக்கு  
மனதைப் பூவாய்  
வைத்து நீ கொள்  
அப்பூவேன் கடவுளுக்கப்பா  
என்ன இது வெல்லாமே  
லஞ்சமா –என்றும்  
ஒரு நாள்  
நானும் கேட்டேன்  
உடன் பார்த்தால்  
முகம் அவனுக்கு  
கறுப்பு பூசி  
வெளிப்பட்டது  
என்ன போச்சப்பா  
இப்பூவிலே உனக்கென்று  
கடுகு வெடிப்பிலாய்  
அவன் சொல்லிப் போனான்  
ஆனாலும் இவ்விடயங்களில்  
பூக்களாய் வீட்டின் வேலிகள்  
பெறுகின்ற குதூகலம்  
அவனாலே அழிய  
விடிகாலையே  
சோம்பிச் சரிகிறதே  
பூமரக் கிளை  
 
நீ.பி. அருளானந்தம்

Comments