பெண்களுக்கென நாப்கின்ஸ் உற்பத்திக்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய Fems | தினகரன் வாரமஞ்சரி

பெண்களுக்கென நாப்கின்ஸ் உற்பத்திக்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய Fems

இலங்கையின் அதிநவீன சுகாதார நாப்கின்ஸ் உற்பத்தி ஆலையாகத் திகழ்ந்து வரும் Fems, அது ஆற்றிவரும் பங்களிப்பை விளக்கும் வகையில் தொழிற்சாலை சுற்றுலா மற்றும் ஊடகவியலாளர் மாநாட்டை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. தங்கொட்டுவையில் அமைந்துள்ள உற்பத்தித் தொழிற்சாலையில் நடந்த இந்நிகழ்வில் வர்த்தகநாமத் தூதுவரான புஷ்பா சொய்சா, அரசாங்க ஆசிரியர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் SLSI அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.  

தொழிற்சாலைக்கான சுற்றுலாவின் ஆரம்பத்தில் தொழிற்சாலையின் விதிமுறைகள் மற்றும் ஒழுக்காற்று விதிமுறைகளுக்கு அமைவாக விருந்தினர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தொழிற்சாலையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வசதிகள், தரநிர்ணய நடைமுறைகள் தொடர்பிலும் விருந்தினர்களுக்கு சுற்றிக் காண்பிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து அதிநவீன உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வுகூட பகுதிகளுக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.  

இலங்கையில் பெண்களுக்கு முதன்முறையாக முப்பரிமாண (3D) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்த சுகாதார நெப்கின்ஸ் வர்த்தகநாமம் என்ற வகையில், கடுமையான தரநிர்ணய நடைமுறைகளின் கீழ் முழுமையான சுகாதார நிலைமைகளுக்கு உட்பட்டு உற்பத்தி செய்வதற்கு உயர் தொழில்நுட்ப மற்றும் முழுமையான உயர்வேகம் கொண்ட, தன்னியக்க இயந்திரங்களை Fems உபயோகித்து வருகின்றது. அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கடுமையான பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தராதரங்களைக் கொண்டுள்ள, அங்கீகரிக்கப்பட்ட மூலப்பொருட்களை உபயோகித்து, இலங்கை பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான நவீன உற்பத்தி வகைகளை இந்த வர்த்தகநாமம் உற்பத்திசெய்து வருகிறது. நிறுவனத்தின் தரநிர்ணய கொள்கைக்கு அமைவாக, SLS மற்றும் ISO 9000தரச்சான்று அங்கீகாரங்கள் போன்ற அதியுயர் தரச்சான்று அங்கீகாரங்களை இந்த வர்த்தகநாமம் பெற்றுள்ளது.  

SLSI இன் உதவிப் பணிப்பாளரான (உற்பத்தி தரச்சான்றுப் பிரிவு) நிலுௗப கெகுலந்தர இது தொடர்பில் வெளிப்படுத்துகையில், அனுமதிக்கப்பட்ட மூலப் பொருட்களின் பாவனை, உறிஞ்சும் ஆற்றல் மட்டங்கள், அமில (pH) மட்டங்கள், சுத்தமான உற்பத்தி நிலைமைகள் மற்றும் முடிவு உற்பத்திகளின் தரம் அடங்கலாக பல்வேறுபட்ட அம்சங்களின் அடிப்படையில் சுகாதார நெப்கின்களுக்கான SLS தரச்சான்று அங்கீகாரம் வழங்கப்படுகின்றது.

Comments