நாள், கோள், நற்பலன் | தினகரன் வாரமஞ்சரி

நாள், கோள், நற்பலன்

மேஷம் 

மேஷ ராசி அன்பர்களே, எதைச் செய்வது, எப்படிச் செய்வது, எங்கே போவது போன்ற குழப்ப நிலையில் இருக்கிறீர்கள். கொடுத்த வாக்கும் காற்றில் பறக்க, தொழிலும் எதிர் பாராத சிக்கல்களைச் சந்திக்க, உதவும் உறவினர்கள், உற்ற நண்பர்கள் வந்து சேர்வார்களாயிருந்தால் நன்மையே என்று காத்திருக்கும் நிலையாகிவிட்டது. ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் அதிர்ஷ்ட தேவதை உங்களை எட்டிப் பார்க்கும் நேரமும் இருக்கிறது. அதே போல் ஒதுங்கியிருந்த சில சங்கடங்களும், வீட்டுக் கதவைத் தட்டி நலம் விசாரிக்க வரும், கவனம்.   உத்தியோகம், பதவிகளில் இருக்கும் அன்பர்களே, இந்த வாரம் அப்படியொன்றும் சிலாக்கியமானதாக அமையாது. காத்துக் கிடக்கும் பெயர்ப் பட்டியலில் கூட உங்கள் பெயர் கடைசியில் தான் இருக்கும்.

ரிஷபம்

பனிக்காலக் குளிர் காற்றும், எரி மலைத் தணலும் மாறிமாறிக் கலந்து வீசும் வாரமாக இருக்கும். தடைபட்ட திருமணங்கள் மீண்டும் புத்துயிர் பெறவும், புதியவைகளுக்குப் பேச்சுவார்த்தைகள் தொடங்கவும், பிரிந்து மனச்சுமையுடன் வாழும் தம்பதியினருக்கு, திருப்பு முனையாகவும், நல்ல செய்திகளும் வரும் நாட்களாக மிளிரும். வீண் விவாதங்களில் ஈடுபட்டு மன உளைச்சல்களை பிறருக்கும் தமக்கும் உண்டாக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். மதிப்பும் மரியாதையும் உயர்ந்த நிலையில் இருக்கும். இருப்பினும் தொந்தரவுகளுக்கும், சிக்கல்களுக்கும் குறைவிருக்காது. தொழில் துறைகளில் வருமானங்கள் போதுமான அளவில் கிடைக்கும்.  லாவகமாகக் கையாண்டால் விரும்பியவைகளைச் செய்து முடிக்கலாம். 

மிதுனம்

ஏராளமான சிக்கல்களை தாராளமாகச் சந்திப்பீர்கள். என்றாலும், அவைகளையெல்லாம் கடந்து பல சாதனைகளையும் படைக்க இடமிருக்கிறது. தொழில் என்பது வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளால் பின்னப்பட்டிருக்கும். இல்லறமும் உறவுகளும் இயன்ற அளவு விரிசல்களையும் பிணக்குகளையும் உண்டாக்கும். பணப் புழக்கம் தடுமாற்றத்தைத் தரும். வருமானங்களும் காலை வாரிவிடும். இது மட்டும் போதாது, குடும்பத்திலும் குழப்பம் வந்து தலையைப் பிடித்து ஓய்ந்து உட்காரும் சந்தர்ப்பங்களே அதிகம். உங்களால் நல்ல நிலைக்குக் கொண்டு வரப்பட்ட இளைய சகோதரர்கள் சகாயங்கள் செய்ய முன்வந்து நிற்பார்கள்.  சலுகைகளுக்காகவோ, வேறு உதவிகளுக்காகவோ யாரையும் நாடாதிருப்பது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள உதவும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே, தெளிவான சிந்தனையும், தீர்க்கமான முடிவுகளும் மனதில் எழுந்தாலும் அவைகளைத் தொடர நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதோடு மனதிலும் துணிச்சல் குறைவாகவே உதிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் முன்னேற்றங்கள் அடைய ஊக்கத்துடன் செயல்பட முடியாத சூழலே உண்டு. முதலீடுகளையோ, லாபங்களையோ காப்பாற்றிக் கொள்ளத் தைரியம் வந்து சேரவில்லை. நண்பர்களுடைய, உறவினர்களுடைய உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமே.  உத்தியோகங்கள், பதவிகள் வகிக்கும் அன்பர்கள் பலவித அனுபவங்களை அடைவார்கள். மேல் மட்டத்தில் உள்ளவர்களால் பந்தாடப்படுவதும் நடக்கும், அத்தோடு சில நன்மைகளும், பதவி உயர்வுகள் போன்றவைகள் வந்து சேரும்.

சிம்மம்

பல தரப்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். தொழில் வருமானங்களில் பாதிப்புகள் இருக்காது. பெரிதாக தொழில் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை இருக்கும். விரயங்களுக்கு ஈடான பணப்புழக்கம் வந்துவிடும். சோக தாபங்களும், மரியாதைகளில் பாதிப்புகள் வரக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறும். இதனால் கௌரவத்திற்கு நெருக்கடி நிலை உண்டாகும். அன்னை வழி உறவினர்கள் பூசல்களை உண்டாக்கி மனநிம்மதிக்கு வேட்டு வைப்பர். நன்மைகள் தரும் கலகங்களும் இடம் பெறும்.  பொறுப்பான பதவிகளிலும், உத்தியோகங்களிலும் இருக்கும் அன்பர்கள் எதிலும் பட்டும் படாமலும் இருக்கப் பழக வேண்டும். தமது நிலைகளைக் காத்துக்கொள்ள நல்ல வழி அதுவேயாகும். 

கன்னி

கன்னி ராசி அன்பர்களே, வழக்கம் போல் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் காரியங்களில் ஈடுபடுவதே நல்லது. எந்தச் சங்கடங்களிலும் நுழைந்து காயப்படாமல் சிரித்த முகத்தோடு வரும் உங்களது அபார சக்தியின் முன்னே இப்போதிருக்கும் தொல்லைகள் எல்லாம் தூசியேதான். அலைச்சல்களும், விரயங்களும் ஒன்றும் செய்யப் போவதில்லை. காரிய நஷ்டங்களை அனுபவங்கள் என்ற கணக்கில் எழுதி விடுங்கள். தேடி வரும் அபகீர்த்திகளை செல்லப் பெயராக எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் நாளடைவில் மாறிப் போய்விடும்.  பதவிகளில் இருக்கும் உத்தியோக அன்பர்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

துலாம்

சூழ்நிலையைத் துல்லியமாக அறிந்து செயல்படுவதில் கைதேர்ந்த உங்களது அறிவுக் கூர்மையானது பல நல்ல வெற்றிகளைத் தேடித்தரும். பண வரவுகள், அதனால் ஏற்படும் மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் பல சுப நிகழ்ச்சிகளுக்கு வழிவகுக்கும். பிள்ளைகளால் பெருமையும், குடும்ப விவகாரங்களில் நல்ல பெயரும், மரியாதையும் உயரும். சமுதாயத்தில் வரவேற்புகளும் கிடைக்கும். பெரியோர் சகாயங்களும், அன்பும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் இருக்கும் பிரச்சினைகளை எளிதில் கையாள, உங்களது சொல்வாக்கின் பலம் உதவியாக அமையும்.  பதவிகளில் இருப்பவர்களுக்கு மேல் மட்டத்தினர் செவி சாய்ப்பதால் தமது இஷ்ட காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே, சங்கடங்களும், தடங்கல்களும் இடை மறிப்பதால் எடுக்கும் காரியங்களைச் செய்து முடிக்கக் காலதாமதங்களும், செலவுகளும் அதிகமாகும். சில சமயங்களில் நஷ்டங்களிலும் முடிவடையும். தமது சொற்களே எதிர்மறையாக மாறிவிடும் அவல நிலையும் உண்டாகும். குடும்பத்திலும், சூழவுள்ள உறவினர்களும் போதுமான ஒத்துழைப்பை வழங்காமல் ஒதுங்கி நிற்க முயல்வார்கள்.  உத்தியோக, பதவிகளில் இருப்பவர்களுக்கு அவ்வளவு சுபமான காலம் அல்ல. யாரையும் நம்பி சொல்வது, நிச்சயமாகச் செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பலன் களைத் தருவது குறைவாகவே இருக்கும். பெண்களைப் பொறுத்த வரையில் குடும்பத்தில் அவர்களது முயற்சிகளுக்கும், சொற்களுக்கும் பெரிய வரவேற்பு இருக்காது. வேலை செய்யும் இதே நிலைதான்.  

தனுசு

தனுசு ராசி அன்பர்களே, தடுமாற்றங்களால் வழி தவறிப் போய்விட்டோமோ என்ற சந்தேகம் அடி மனதில் எழுந்திருக்கும். அடி மேல் அடிகள், முடிவில்லாத் தொடர் தொல்லைகள் நாம் நடந்து செல்லும் வழி சரிதானா என்று யோசிக்கத் தூண்டுவதில் வியப்பு இல்லைதான். தீர்த்துக் கொள்ள வாய்ப்பில்லாத பிரச்சினைகளை தலையில் சுமந்து கொண்டு இருக்கும் போதே தொழிலும், குடும்பமும் போட்டி போட்டுக் கொண்டு சிக்கல்களை உருவாக்குவார்கள். சில முயற்சிகள் பலிப்பதைப் போல கண்ணாமூச்சி காட்டும். காரிய நஷ்டங்களால் கையிருப்பும் குறையும். 

ஆன்மீகம் என்ற பெயரில், விரயங்கள் வீடு தேடி வரும். பதவிகள் வகிக்கும் அன்பர்களே சீராக எதையும் நடத்திக் கொள்ள முடியாமல் இருப்பதாகக் கவலைப்படத் தேவையில்லை.

மகரம்

மகர ராசி அன்பர்களே, ஒரு வகையில் தாங்கள் அதிர்ஸ்டசாலிகள் தான். எங்கே பிழை நடந்தாலும் தொழிலும், வருமானங்களும் குறைவின்றி நடந்தேறும். செலவுகளைச் செம்மையாக நிர்வகித்து உங்களது ஒரு பகுதியை நன்றாக அமைத்துக் கொள்வீர்கள். விருந்துகளும், சுவையான உணவுகளும் மகிழ்ச்சியைத் தரும். குடும்பமும், உறவினர்களும், நண்பர்களும் ஒரு மனதாக உங்களைப் புகழ்வார்கள். பல தரப்பட்ட பொருட்களை வாங்கினாலும் மனதில் திருப்தி நிலவாது. 

வியாழன் இரவு 08.13முதல் வாரக் கடைசி நாள் வரை சந்திரன் அட்டம ஸ்தானத்தில் சஞசரிப்பார். மனைவி வழி உறவினர்கள் தொல்லைகள் தருவார்கள். ஒதுங்கி இருந்து அவர்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகம் செய்யும் அன்பர்களே, அரசாங்கம் உங்கள் விஷயங்களில் தலையிடக் கூடும். திடீர் உத்தரவுகள் உங்கள் நிம்மதிக்கு வேட்டு வைக்கும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே, முயற்சிகளில் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், செய் தொழில் சிறப்பான வருமானங்களைத் தருவதால் தலைக்கு மேல் வெள்ளம் போகும் நிலை ஏற்படாது. புதன் முதல் சீரான நிலையைப் பொருளாதாரம் அடையும். கல்யாண விவகாரங்கள் பெரிதாகப் பலன் அளிக்காது. பேச்சுக்கள் பாதியிலேயே முறிந்து போகும் நிலையே காணப்படுகிறது. சுற்றுச் சூழலில் பலவித கதைகள் சொல்லப்பட்டு அவைகள் குடும்பத்திலும் எதிரொலிக்கும். பெண்கள்சம்பந்தமாகவும் அவை அமையலாம். தொழில் இட மாற்றங்கள் பற்றிய பேச்சுக்கள் தொடரும். மிக வேகமாகச் சிலர் அதில் ஈடுபடவும் செய்யலாம். 

உத்தியோகத்தர்கள் விரும்பாத இடங்களுக்கு மாற்றம் வருவதைத் தடுக்கத் தடுமாற வேண்டி யேற்படும். சத்ருக்கள் இந்த சந்தர்ப்பத்தை உங்களுக்கு எதிராக உபயோகப் படுத்திக் கொள்ளலாம். பெண்களுக்கு ஒரு அமைதியான வாரம் அல்ல.

மீனம்

நினைத்துப் பார்க்காத நன்மைகள் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டு இருக்கின்றன. நிதானமும், புத்திசாலித்தனமும் நிரம்பிய தாங்கள் இந்த பொன்னான சந்தர்ப்பங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நலமே. உங்கள் சொல்லுக்கும், முயற்சிகளுக்கும் பெரிய வரவேற்புக் கிடைக்கும். அவைகள் பொருளானாலும், அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சிறு எத்தனிப்புகள் பாரிய பலனைத் தந்துவிடும். திருமண முயற்சிகள் வெகு விரைவாகக் கைகூடும். பெரியவர்கள், முதியவர்கள் உங்கள் பேச்சை செவி மடுப்பார்கள். மரியாதையும், வரவேற்பும் பிரமாதமாக அமையும்.  உத்தியோகங்களில் இருப்பவர்கள், விரும்பிய இடங்களுக்கு மாற, கிடப்பில் இருந்து பதவி உயர்வுகள் இவைகளைப் பெற இதுவே நல்ல சந்தர்ப்பம். பெண்களே! வேண்டியதைப் பெற்றுக்கொள்ள இதுவே தருணம்.

Comments