உழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில் | தினகரன் வாரமஞ்சரி

உழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் நல்லூரில்

யாழ்ப்பாணம் நல்லூரில் உழைக்கும் மகளிர் அமைப்பின் விற்பனைக் கூடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் அவர்களால் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு உழைக்கும் மகளிர் அமைப்பு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. 

யாழ் நகரில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடும் ஒரு விழாவாக நல்லூர்த் திருவிழா அமைந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அவர்களின் வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். சர்வதேச விளையாட்டுகளான கிரிக்கெட் மற்றும் உதைபந்து என்பவற்றை தமது நாடுகளில் வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாடும் போட்டி போடுவது அதற்காகத்தான். சிறிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் அனைவரும் வருகை தருவது இவ்வாறான விழாக்களில்தான். 

யாழ்ப்பாண மாம்பழம், யாழ்ப்பாண நல்லெண்ணெய், யாழ்ப்பாண சின்ன வெங்காயம், யாழ்ப்பாண முருங்கைக்காய், யாழ்ப்பாண ஊறுகாய், யாழ்ப்பாண தோசை,யாழ்ப்பாண வடகம், யாழ்ப்பாண மோர் மிளகாய், வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு, பருத்தித்துறை வடை இன்னும் பல சொல்லிக்கொண்டு போகலாம்.

எமது பாரம்பரியமான பொருட்களுக்கு இன்றும் அமோக வரவேற்பு உள்ளது. 

இவற்றைப் பயன்படுத்தி வருடம் முழுவதும் மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக தயாரித்து இக்காலகட்டத்தில் வருமானத்தைத் தேடிக்கொள்ளவும் ஓடர்களைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும். 

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே உழைக்கும் மகளிர் அமைப்பின் நோக்கமாகும். உழைக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலேயே இந்த விற்பனைக் கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இக்கூடம் சிவன் கோயிலுக்கு அருகில் 142ஆவது இல்லத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு ஆடை அணிகலன்களையும், படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும், கால் துடைப்பாங்கள், பாரம்பரிய பலகாரங்கள் என பல்வேறு பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்  

இவற்றை நீங்கள் வாங்குவதன் மூலம் உழைக்கும் பெண்களை உற்சாகப்படுத்துவதோடு அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.  

பொருட்களை விற்பவர்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டு விற்பனை செய்ய முடியும் என உழைக்கும் மகளிர் அமைப்பின் தலைவி மிதிலா ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார்.   

 

Comments