சிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள் | தினகரன் வாரமஞ்சரி

சிங்கர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள John Deere 4WD டிராக்டர்கள்

சிங்கர் (ஸ்ரீலங்கா) பிஎல்சி, உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் John Deere 4WD டிராக்டரின் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் திகதியன்று பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே, பிரதான நிறைவேற்றதிகாரி மகேஸ் விஜயவர்தன, John Deere இன் ஆசியப்பிராந்திய விற்பனை சந்தைப்படுத்தல் அதிகாரி ஜுவர்கன் சிபர் உட்பட சிங்கர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.  

இந்நிகழ்வில் John Deere 4WD டிராக்டர்களை கொள்வனவு செய்த முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு பாராட்டு சான்றுப்பத்திரங்கள் வழங்கப்பட்டது. John Deere இன் அதியுயர் தொழில்நுட்பத்திலான வேளாண் இயந்திரங்களை இலங்கையின் விவசாயத்துறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் சிங்கர் நிறுவனம் புதிய டிராக்டர் மாடல்களை சந்தைப்படுத்தியுள்ளது. சிங்கர் ஸ்ரீலங்கா தற்போது இரு சக்கர டிராக்டர்களை சந்தைப்படுத்தி வருவதுடன், தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் இலங்கையின் முன்னணி டிராக்டர் மாடலாகத் திகழ்கிறது. 

வேளாண்துறை இயந்திரங்களுக்கு இலங்கையில் பாரிய சந்தைக் கேள்வி காணப்படும் தருணத்தில் இந்த மூன்று புதிய 4WD டிராக்டர் வகைகளை அறிமுகப்படுத்தப்படுவதானது, குறைந்த செலவில் அதிகபட்ச திறனுடன்கூடிய தொழில்நுட்பத்தினை உபயோகிப்பதற்கான வாய்ப்பினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம் வேளாண் துறையிலான நிபுணத்துவம் மற்றும் நாடளாவிய வலையமைப்பு வாயிலாக விவசாயிகள் மத்தியில் மிகவும் நம்பகரமான இப்புதிய மாடல்களை நிலைநிறுத்த எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது.  

John Deere 3036E, 5045D மற்றும் 5047D ஆகிய மூன்று புதிய மாடல்களும் முறையே 36, 47 மற்றும் 45 இயந்திர வலுவினைக் கொண்டுள்ளன. Power Steering, சக்திவாய்ந்த Hydraulic தொழில்நுட்பம் மற்றும் அதிக எடையைச் சுமக்கும் ஆற்றல் ஆகிய சிறப்பம்சங்களை இந்த புதிய மாடல்கள் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 3036E மற்றும் 5045D ஆகியவை நான்கு சக்கர மாடல்களாகக் கிடைக்கப்பெறும் அதேவேளை, 5047D இருசக்கர மாடலினை இலகுவில் நான்கு சக்கரத் தொழிற்பாட்டுக்கு மாற்றும் வசதியும் காணப்படுகிறது. மேற்கூறிய மாடல்களில் ஒன்றை வாங்குவதன் மூலம் 42 தகடுகளுள்ள இயந்திரக் கலப்பை ஒன்றை இலவசமாகப் பெறமுடியும்.

Comments